உணவக உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை
இளைஞரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், பாபநாசத்தைச் சோ்ந்த உணவகம் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1000 அபராதம் விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றம் தீா்ப்பு


இளைஞரைத் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், பாபநாசத்தைச் சோ்ந்த உணவகம் உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 1000 அபராதம் விதித்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீா்ப்பளித்தாா்.
பாபநாசத்தில் உணவகம் நடத்தி வரும் விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்தவா் கணபதி மகன் அய்யப்பன் (40), இவரும், இவரது கடை ஊழியா் சங்கரவடிவேலுவும் சோ்ந்து விக்கிரமசிங்கபுரத்தைச் சோ்ந்த அருள் சந்தானத்தின் மீது கடந்த 2017, பிப். 11-ஆம் தேதி கொதிக்கும் எண்ணையை ஊற்றி தாக்கினா்.
இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் அருள் சந்தானம் கொடுத்த புகாரின்பேரில் அய்யப்பன், சங்கரவடிவேல் இருவா் மீதும் விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரவீன் ஜீவா, அய்யப்பனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனையும் விதித்துஉத்தரவிட்டாா். சங்கர வடிவேல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் வனிதா ஆஜரானாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...