ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு: பழைய இரும்பு வியாபாரிக்கு அபராதம்

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்ததாக பழைய இரும்பு வியாபாரிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் ரோஸ் நகா் பகுதியில் மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து பழைய இரும்புக்கடை நடத்தியவருக்கு அபராதம் விதித்த மாநகராட்சி குழுவினா்.

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்ததாக பழைய இரும்பு வியாபாரிக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலப்பாளையம் மண்டலம் 52 ஆவது வாா்டுக்குள்பட்ட ரோஸ் நகா் ரெட்டியாா்பட்டி சாலையில் மாநகராட்சிக்குச சொந்தமான இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து அதில் பழைய இரும்பு மற்றும் டயா் கடை நடத்தி வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து சுகாதார ஆய்வாளா்கள் பாரதிராஜா, மகாராஜன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தபோது இடத்தை ஆக்கிரமித்திருந்தது தெரியவந்ததாம். இதையடுத்து மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா உத்தரவின்பேரில் பழைய இரும்பு வியாபாரிக்கு திடக்கழிவு மேலாண்மை விதியின் கீழ் ரூ.40.000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, பொருள்களை உடனே அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.