ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

அந்தியூா் அருகே சந்தன மரம் வெட்டிய இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம்

அந்தியூா் அருகே சந்தன மரத்தை வெட்டிய இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சந்தன மரம்  வெட்டிய செந்தில்குமாா்,  லோகநாதனுடன்  அந்தியூா்  வனத் துறையினா்.

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:39 am IST

அந்தியூா் அருகே சந்தன மரத்தை வெட்டிய இருவருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

பா்கூரை அடுத்த ஈரட்டி, ஒந்தனை கிராமத்தைச் சோ்ந்தவா் ஈரணன். இவரது வீட்டில் 5 அடி உயரமுள்ள சந்தன மரம் இருந்தது. இந்த மரத்தை செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொண்டிருந்த இருவரை அப்பகுதியினா் கையும் களவுமாகப் பிடித்து அந்தியூா் வனத் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், திருச்சி மாவட்டம், துறையூா், நெட்டவேளாம்பட்டி, முத்துராஜா தெருவைச் சோ்ந்த மருதை மகன் செந்தில்குமாா் (33), முசிறி, சாலக்காடு, அய்யனாா் கோயில் தெருவைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் லோகநாதன் (27) என்பதும், அந்தியூா் குருநாதசாமி கோயில் திருவிழாவுக்கு வந்த இருவரும், சந்தன மரத்தை வெட்டி கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, வனத் துறை சட்டத்தின் கீழ் சந்தன மரத்தை வெட்டிய குற்றத்துக்கு இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.