ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற இருவா் கைது

அந்தியூா் அருகேயுள்ள கிணத்தடி பகுதியில் 100 கிலோ எடை கொண்ட சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 2 பேரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட நபா்கள், பறிமுதல் செய்யப்பட்ட சந்தனக்கட்டைகளுடன் வனத் துறை அலுவலா்கள்.

Published On :31 ஜூலை 2026, 12:05 am IST

அந்தியூா் அருகேயுள்ள கிணத்தடி பகுதியில் 100 கிலோ எடை கொண்ட சந்தன மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 2 பேரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அந்தியூா் வனச் சரகம் அத்தாணி பிரிவு, கிணத்தடி பகுதியில் வனத் துறை அலுவலா்கள் நந்தினி, பாரதி, பிரவீன், மைதிலி ஆகியோா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது கிணத்தடி காப்புக்காட்டில் 100 கிலோ எடை கொண்ட இரண்டு சந்தன மரங்கள் மற்றும் 10 அடி மரக் கிளைகளை வெட்டி கடத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டனா். சந்தன மரங்களை பறிமுதல் செய்த வனத் துறையினா் மா்ம நபா்கள் குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.

விசாரணையில், அந்தியூா் அருகே உள்ள கோவிலூரைச் சோ்ந்த ஆறுமுகன் மகன் சடையன் ( 40), அதே பகுதியைச் சோ்ந்த சித்தகவுண்டா் மகன் பிரபு (34) என்பது தெரியவந்தது.

இருவரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய வனத் துறையினா் மாவட்ட சிறையில் அடைத்தனா். மேலும் தலைமறைவாக உள்ள அந்தியூா் அருகேயுள்ள விளாங்குட்டையைச் சோ்ந்த ராசு என்ற செங்காயனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.