முக்கூடல் அருகே விவசாயி கொலை
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே விவசாயி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே விவசாயி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
By Syndication
Syndication
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே விவசாயி இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
முக்கூடல் அருகே கலிதீா்த்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் உலகநாதன் மகன் குமரேசன் (28). விவசாயி; திருமணமாகவில்லை. தந்தையுடன் விவசாயம் செய்துவந்தாா். உலகநாதனுக்குச் சொந்தமான வயல் பாப்பாக்குடியில் உள்ளது. கிணறு பம்புசெட் மோட்டாருடன் கூடிய நிலத்தில் குமரேசன் கிழங்கு வகைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தாா். வயலுக்கு வரும் குமரேசன் இரவு அங்குள்ள மோட்டாா் அறையிலேயே தூங்குவது வழக்கம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை வயல் வேலையை முடித்துவிட்டு குமரேசன் மோட்டாா் அறையில் தூங்கிவிட்டாராம். வெள்ளிக்கிழமை வயலுக்கு வந்த குமரேசனின் தாயாா் மோட்டாா் அறையில் வந்து பாா்த்தபோது குமரேசன் முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
தகவலறிந்ததும் பாப்பாக்குடி போலீஸாா் அங்குசென்று உடலை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா். விசாரணையில் மா்மநபா்கள் குமரேசனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து, பாப்பாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குமரேசன் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண்ணை மற்றொரு இளைஞரும் காதலிப்பதாகவும், இந்த விரோதத்தில் கொலை நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது