பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆரணியில்தான் தலைமை மருத்துவமனை

ஆரணி, பிப். 28: மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆரணியில் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால்

News image
Updated On :2 ஜனவரி 2024, 4:22 pm

பி.ஜெயச்சந்திரன்

ஆரணி, பிப். 28: மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆரணியில் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு திருவண்ணாமலையில் மருத்துவக்கல்லூரி அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட தலைமை மருத்துவமனையை ஆரணிக்குக் கொண்டுவர அப்போதைய ஆரணி எம்எல்ஏ ஆர்.சிவானந்தம் முயற்சி மேற்கொண்டார். மேலும் ஆரணி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக்கப்படும் என்று அப்போதைய அரசும் தெரிவித்தது.

இந்நிலையில் ஆரணியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் செய்யாறு எம்எல்ஏவுமான முக்கூர் என்.சுப்பிரமணியன், ஆரணிக்கு தலைமை மருத்துவமனையை கொண்டுவர அரசு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி கட்டி முடிக்கப்பட்ட பின்னர்தான் மாவட்ட மருத்துவமனையை எங்கு கொண்டு வருவது என அதிகாரிகள் ஆய்வு செய்து முடிவு செய்வர்.

செய்யாறில் முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்த போது செய்யாறு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். எனினும் அதிகாரிகள் ஆய்வு செய்த பின்னர்தான் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்றார்.

இந்நிலையில் செய்யாறு மருத்துவமனையை தலைமை மருத்துவமனையாக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகத் தெரிகிறது.

இதற்கு முன்பு ஆரணிக்கு வரவேண்டிய வருவாய்க்கோட்ட அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சுகாதாரத்துறை அலுவலகம், சர்க்கரை ஆலை, சிப்காட் தொழிற்சாலை, அரசு கலைக்கல்லூரி ஆகிய அனைத்தும் கைவிட்டுப் போனதால் வருத்தத்தில் உள்ள ஆரணி பகுதி மக்கள், தலைமை மருத்துவமனையும் வராது என்று தெரிவதால் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்திலேயே பெரிய நகராட்சியாக உள்ளது ஆரணி நகராட்சி. அதிக வருவாய் உள்ள நகராட்சியும் இதுதான். ஆரணி பகுதியில் 300-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளும், 400-க்கும் மேற்பட்ட பட்டு சேலை உற்பத்தி நிறுவனங்களும், ஏராளமான செங்கல் சூளைகளும் உள்ளன.

மேலும் மாவட்டத்தின் மையத்தில் உள்ளது ஆரணி. போளூர், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேவிகாபுரம், கண்ணமங்கலம், வந்தவாசி பகுதி மக்கள் எளிதில் வந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம்.

சரியான போக்குவரத்து வசதி இல்லாத செய்யாறுக்கு இத்திட்டத்தைக் கொண்டுசென்றால், இப்பகுதி மக்கள் செய்யாறுக்கு செல்வதை விட வேலூர் அரசு மருத்துவமனைக்குச் செல்வதையே விரும்புவர். வேலூருக்கு தொலைவும் குறைவு, போக்குவரத்து வசதியும் அதிகம்.

இதுகுறித்து ஆரணி ரோட்டரி சங்கத்தினர், அரிமா சங்கத்தினர், மளிகை வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல சமூக தொண்டு நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியருக்கும், தமிழக முதல்வருக்கும் மனுக்களையும் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அரசு இது குறித்து உரிய ஆய்வு செய்து தலைமை மருத்துவமனையை ஆரணிக்கே கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.