உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும்
தென்காசி, ஜூலை 12: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர்முகைதீன் திங்கள்கிழமை கூறினார். தென்காசியில் ச


தென்காசி, ஜூலை 12: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் காதர்முகைதீன் திங்கள்கிழமை கூறினார்.
தென்காசியில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தமிழகம், கேரளத்தில் வலுவாக உள்ள எங்கள் இயக்கத்தை இந்தியா முழுவதும் வலுவானதாக்க முயற்சித்து வருகிறோம். 10 லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க திட்டமிட்டு, இதுவரை 5 லட்சம் பேரை சேர்த்துள்ளோம்.
தென்காசியில் திங்கள்கிழமை மாநில இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இளைஞரணியில் புதிய விதிமுறைகளை உருவாக்க 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரையில் உள்ள பல்கலைக்கழகத்தில் மட்டுமே இஸ்லாமிய ஆய்வு மையம் உள்ளது. இதுபோன்ற மையத்தை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அமைக்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும். வெவ்வேறு சின்னங்களில் போட்டியிடாமல் பொதுவான சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். பட்ஜெட் கூட்டத்தொடரில் சிறுபான்மையினருக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்.
விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடத்தவும், மிஸ்ரா கமிஷன் அறிக்கையை அமல்படுத்தவும்,
ஒரே சிவில் சட்டத்தை நீக்க்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
ஆலோசனைக் கூட்டம்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர் காதர்முகைதீன் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் கோதர்மைதீன், மாவட்டத் தலைவர் எம்.துராப்ஷா, அமைப்புச் செயலர் முகம்மது ஷாபி, தென்காசி நடுப்பேட்டை
ஜமாஅத் தலைவர் வி.டி.எஸ்.ஆர். முகம்மது இஸ்மாயில், மாவட்ட வர்த்தக அணிச் செயலர் முகம்மது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அப்துல்ரஹ்மான் எம்.பி., மாநிலப் பொதுச் செயலர் முகம்மது
அபுபக்கர், மாநிலச் செயலர்கள் கமுதி பஷீர், நெல்லை மஜீத், காயல்மகபூப், மாவட்டச் செயலர் மீரான்மைதீன், செய்யதுமுகம்மது, பொருளாளர் காதர்முகைதீன் ஆகியோர் பேசினர்.
மாநில இளைஞரணி அமைப்பாளர் நிஜாமுதீன் வரவேற்றார். மாவட்ட மருத்துவ சேவை அணிச் செயலர் முகம்மதுஅலி நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...