2007-ல் இந்த கூடுதல் பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியது. இதனால், நகருக்குள் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்தது. இதைக் கண்டித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, கோவில்பட்டியிலிருந்து புறப்படும் அனைத்துப் பேருந்துகளும், கோவில்பட்டிக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும் அண்ணா பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் என்றும், மற்ற தொலைதூர நகரங்களிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு மட்டுமே வந்து செல்லும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அண்மைக்காலமாக திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்வதில்லை.