குற்றாலம் ஐந்தருவிக்கு அருகே சுமார் 36.78 ஏக்கரில் அரசு தோட்டக்கலைத் துறை பண்ணை அமைந்துள்ளது. இதில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறையினர் பழம் தரும் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். அரசின் திட்டங்களுக்கும், பொதுமக்களுக்கு விநியோகம் செய்யவும் இவை அங்கு வளர்க்கப்படுகின்றன. எஞ்சியுள்ள 26 ஏக்கரில் ஆங்காங்கே பழ மரங்களும், காட்டு மரங்களும், இதர செடி, கொடி, தாவரங்களும் உள்ளன. பழத்தோட்ட அருவியும் இந்த பண்ணைக்கு அருகில்தான் உள்ளது. அரசு அறிவித்துள்ள "அருவிப் பூங்கா'வை அமைக்க இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு தோட்டக்கலைத் துறையின் பழ மரக்கன்று நாற்றங்கால் உள்ள 10 ஏக்கர் தவிர இதர 26 ஏக்கரில் பயன்தராத மரம், செடி, கொடிகள் அகற்றப்பட்டு "அருவிப் பூங்கா'வை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.