தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஆலங்குளம் வழியாக தென்காசி-நெல்லைக்கு ரயில் பாதை அமைக்கப்படுமா...?

ஆலங்குளம், ஜன. 9: தென்காசியிலிருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையின் மையப் பகுதியில் ஆலங்குளம் அமைந்துள்ளது

Updated On :20 செப்டம்பர் 2012, 10:43 am

ஆலங்குளம், ஜன. 9: தென்காசியிலிருந்து ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு

ரயில் பாதை அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

திருநெல்வேலி-தென்காசி பிரதான சாலையின் மையப் பகுதியில் ஆலங்குளம் அமைந்துள்ளது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர் போன்ற முக்கிய நகரங்களைச் சுற்றி 100-க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயம், அரிசி ஆலைகள் உள்ளிட்ட தொழில்கள் நடைபெறுகின்றன. இப் பகுதி சிறுவணிகர்கள் அதிகம் நிறைந்துள்ள பகுதி. இங்குள்ளோர் பலர் கேரளத்தின் பல பகுதிகளில் பாத்திரம், ஜவுளி வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல இப் பகுதிகளிலிருந்து கேரளத்துக்கு அதிகளவில் காய்கனிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கிருந்து தமிழகம் முழுவதும் அரிசி விநியோகமும் நடைபெறுகிறது.

ஆனால் இவை எல்லாம் முழுக்க முழுக்க சாலைப் போக்குவரத்தை மட்டுமே நம்பி உள்ளன. இதனால் கால விரயமும், வீண் செலவும் ஏற்படுகின்றன. ஆலங்குளத்தில் இருந்து முக்கிய நகரங்களுக்கு போதிய சாலைப் போக்குவரத்து வசதிகள் இல்லாதது, இப் பகுதியின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.

இப் பகுதியில் ரயில் பாதை அமைக்கப்பட்டால், இங்கு உற்பத்தியாகும் பொருள்களைச் சந்தைப்படுத்த, ரயில் போக்குவரத்து மூலம் கொச்சி, தூத்துக்குடி துறைமுகங்களை அடைந்து, கடல்வழிப் போக்குவரத்தைப் பயன்படுத்தி தொழில்கள் வளர்ச்சி அடைய வாய்ப்புகள் ஏற்படும்.

தற்போது தென்காசியிலிருந்து, பாவூர்சத்திரம், கடையம், அம்பாசமுத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு ரயில் பாதை உள்ளது. அதேபோல தென்காசியிலிருந்து கேரளத்துக்கும், பாம்புக்கோவில் சந்தை வழியாக சங்கரன்கோவில், மதுரை செல்லவும் ரயில் பாதை உள்ளது.

ஆனால் ஆலங்குளம், கீழப்பாவூர், சுரண்டை, வீ.கே.புதூர் ஆகிய பகுதிகளில் இந்த வாய்ப்பு இல்லாததால், விவசாயிகள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர்.

ஆலங்குளம் வழியாக பாதை அமைக்கும் பட்சத்தில், ஆலங்குளம் அருகிலேயே பெரிய அளவில் ரயில் நிலையம் அமைத்து, 5 முதல் 10 ரயில்களை ஒரே நேரத்தில் நிறுத்திவைக்கும் அளவுக்கு வசதி ஏற்படுத்த முடியும்.

தென்காசியிலிருந்து ஆய்குடி, சுரண்டை, கீழப்பாவூர், வீ.கே.புதூர், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு ரயில் பாதை அமைக்கலாம். அதேபோல சுரண்டையிலிருந்து சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவில்வரை புதிய ரயில் பாதை அமைக்கலாம்.

இவ் வழித்தடங்களில் பல தொழில் நிறுவனங்கள், மேல்நிலைப் பள்ளிகள், கலை அறிவியல் கல்லூரிகள், நர்சிங் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், ஐடிஐ உள்ளிட்டவை அமைந்துள்ளன.

எனவே, இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின்

கோரிக்கையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.