இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, அதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதன் மூலம் கலப்படத்தைப் பெருமளவு தடுக்க முடியும் என கூறப்படுகிறது. தற்போதுள்ள உணவு கலப்பட தடைச் சட்டத்தில் தண்டனைகள் குறைவாக உள்ளதாகவும், அனைத்து வகை குற்றங்களுக்கும் ஒரேவகையான தண்டனைகள் இருப்பதாகவும் சுகாதாரத் துறையினர் கூறுகின்றனர். இக் குறைகள், உணவு பாதுகாப்பு சட்டத்தில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இச் சட்டத்தில் "லேபிள்' தவறு, உயிருக்கு ஆபத்தில்லா கலப்படம், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் கலப்படம், உயிர் இழப்பு ஏற்படுத்தும் கலப்படம் என குற்றங்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.