ஆலங்குளம்,பிப்.11: ஆலங்குளத்தில், பிரதான சாலையில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள தொட்டியான்குளம் பகுதியில்,புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் ஆலங்குளத்தில், ஆரம்ப காலங்களில் தொட்டியான்குளம் அருகே,சிறிய பஸ் நிழற்குடை மட்டுமே இருந்தது.
காலப் போக்கில், பெருகி வந்த போக்குவரத்தின் காரணமாக, பிரதான சாலையில், ஆலங்குளத்தின் மேற்கு பகுதியில், 1983 ல் ஒரு ஏக்கர் 4 சென்ட் நிலப்பரப்பில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டது.
அப்போதைய தேவைக்கு ஏற்ப விரிவாகக் கட்டப்பட்ட பஸ் நிலையத்தில், பேரூராட்சி நிர்வாகம் வருமானத்தை மட்டும் கவனத்தில் கொண்டு, பஸ் நிலையத்தைச் சுற்றி மூன்று பகுதிகளிலும் கடைகளைக் கட்டி, வாடகைக்கு விட்டது. அதோடு பஸ் நிலையம் உள்பகுதியிலும் கடைகள் வாடகைக்கு விடப்பட்டன.
பஸ் நிலையத்திற்குள் கடைக்காரர்கள் பெரும்பாலானோர், முன்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்துக் கொண்டதாலும்,பஸ் நிலையத்திற்குள் சைக்கிள், மோட்டார்சைக்கிள்களை நிறுத்துவதால் பஸ் நிலையம் சுருங்கிக் கொண்டே வருகிறது.
இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. பஸ்களை சரியாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல முடிவதில்லை. அதோடு மினிபஸ், டவுன்பஸ், தனியார்பஸ் போன்ற வாகனங்களை சிறிது நேரம் நிறுத்தி வைத்து, சரியான நேரத்திற்கு எடுத்து செல்வதற்கு போதிய இடம் வசதி இல்லை. ஆலங்குளம் பஸ் நிலையத்திற்கு தினந்தோறும் சுமார் 120 பஸ்கள் வந்து செல்கின்றன. தினந்தோறும் சுமார் 30 ஆயிரம் பயணிகள் வந்துச் செல்கின்றனர். வருங்காலங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இதனால் போதிய இடவசதி இல்லை.
எனவே நாளுக்கு நாள் பெருகி வரும் போக்குவரத்திற்கு ஏற்பவும், நெருக்கடியான நேரங்களில் பொதுமக்கள் உட்கார்ந்து செல்வதற்கும் ஏற்ற அளவில் இந்த பஸ் நிலையத்திற்குள் இடம் இல்லை.
இச்சூழ்நிலையில், பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் நிறுத்தி, எடுத்துச் செல்லும் வகையிலும், அதிகளவில் பஸ் பயணிகள் உட்கார்ந்து செல்லும் வகையிலும் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளது.
இதன் அடிப்படையில், தொட்டியான்குளம் பகுதியானது புதிய பஸ் நிலையம் கட்ட தேவையான அளவு இடம் கொண்டதாக அமைந்துள்ளது. தொட்டியான்குளம் 88.38 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நிலங்களோ 68.39 ஏக்கர்தான். குளத்தின் பரப்பளவை காட்டிலும், பயன்பெறும் நிலத்தின் பரப்பளவு குறைவாகவே உள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆய்வு செய்து,தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை அகற்ற வேண்டும். குளத்தை உடன் தூர்வார வேண்டும்.
நீர் நிலைக்காக தூர்வாரப்படும் பகுதிகள் போக, எஞ்சிய நிலத்தை,அரசின் நலத் திட்டங்களை நிறைவேற்றப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தொட்டியான்குளம் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமையும் பட்சத்தில்,போக்குவரத்திற்கு ஏற்படும் சிரமம் குறையும். மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கும்,வர்த்தகர்களுக்கும் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
அரசு போக்குவரத்து பணிமனை, நீதிமன்றங்கள், மகளிர் மேல்நிலைப் பள்ளி போன்றவைகள் அமைக்க பல்வேறு அரசியல் அமைப்புகள் முயன்று வருகின்றன.
இதனால் போக்குவரத்து கூடுதலாகும் வாய்ப்பும் அதிகரிக்கும். எனவே அரசு இதை கவனத்தில் கொண்டு, தொட்டியான்குளம் பகுதியில் சுமார் 10 முதல் 12 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய பஸ்நிலையம் அமைத்து, அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் பயனளிக்குமாறு செய்ய வேண்டும் என கோரிக்கை வலுவடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

