ஆலங்குளம், டிச.25: திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊத்துமலையை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்பட வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 28 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஒன்றியத்தில் ஆலங்குளம் தென்பகுதியில் உள்ளது. அனைத்து ஊராட்சிகளும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளன.
குறிப்பாக ஊத்துமலை, மேலக்கலங்கல், கீழக்கலங்கல், நவநீதகிருஷ்ணபுரம், வாடியூர், கருவந்தா, அச்சங்குட்டம், குறிச்சான்பட்டி, மேலமருதப்பபுரம், பலபத்திரராமபுரம், மருக்கலான்குளம், வடக்கு காவலாக்குறிச்சி, தெற்கு காவலாக்குறித்தி, மேலவீராணம், கீழ வீராணம் உள்ளிட்ட 15 ஊராட்சிப் பகுதிகள் இதில் அடங்கும்.
ஆலங்குளம் ஒன்றியத்தில் உள்ள குருவன்கோட்டை, நல்லூர், சிவலார்குளம், அய்யனார்குளம், குறிப்பன்குளம், நெட்டூர், அகரம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு ஆலங்குளம் ஒன்றியம் மட்டுமன்றி தாலுகாவும், பேரவைத் தொகுதியும் ஆகும்.
ஆனால், ஊத்துமலை சுற்று வட்டார ஊராட்சிகளைப் பொறுத்தவரை வட்டாட்சியர் அலுவலகம் வீ.கே.புதூரும், பேரவைத் தொகுதி தென்காசிக்கும் உள்பட்டது. ஒன்றிய அளவிலான பணிகளுக்கு மட்டுமே ஆலங்குளம் வரவேண்டியுள்ளது.
பொதுவாக, வடக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அளவிலான பணிகளுக்கு ஆலங்குளம் வர பலமணி நேரம் பஸ்ஸýக்காக காத்திருந்து, அலுவலகம் வந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும் வட பகுதியைப் பொறுத்தவரை பெரிய அளவில் வளர்ச்சி அடையவில்லை. ஊத்துமலையை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஏற்படுத்தப்பட்டால், ஊத்துமலை மட்டுமன்றி அப்பகுதியில் உள்ள கிராம ஊராட்சிகளும் வளர்ச்சிபெறும்.
ஊத்துமலையை தலைமையிடமாகக் கொள்ளும்போது, கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கருதினால் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ராஜகோபாலப்பேரி, வி.கே.புதூர் உள்ளிட்ட சில கிராம ஊராட்சிகளையும் இணைக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

மேற்குவங்க பாஜக எம்எல்ஏ கார் மீது கற்கள் வீசித் தாக்குதல்!

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றம்! மீண்டும் கோளாறு - காங்கிரஸ் புகார்!

பிரதமர் மோடியின் இரட்டைத் தோல்வி! எரிவாயு உற்பத்தி சரிவு, உரங்கள் தட்டுப்பாடு: கார்கே
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

