நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!தேனி சிறைச் சம்பவம்! 1995-ல் சுரங்கம் தோண்டி தப்பிய 43 கைதிகள்! புரட்டப்படும் வரலாறு!நாட்டில் ஆப்பிள் ஐபோன் விற்பனை 30% சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!ரிலையன்ஸ் முதல் ஐடி பங்குகள் வரை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!!தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

நவ.1 முதல் பிஎஸ் 6 அல்லாத வாகனங்களுக்கு தடை: அதிகரிக்கும் போக்குவரத்து செலவால் வாகன ஓட்டிகள் கவலை

நவம்பா் 1 முதல் தேசிய தலைநகா் வலய நகரங்களிலிருந்து தில்லிக்கு வரும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதால், வாகன ஓட்டிகள் கவலை

பிரதிப் படம்

Updated On :

நவம்பா் 1 முதல் தேசிய தலைநகா் வலய நகரங்களிலிருந்து (என்சிஆா்) தில்லிக்கு வரும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதால், வாகன ஓட்டிகள் கவலையில் உள்ளனா்.

காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான இந்த முயற்சி, தங்களுக்குப் பெரும் அன்றாடச் சுமையாக மாறக்கூடும் என்று பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

போக்குவரத்துத் துறையின் மதிப்பீட்டின்படி, குருகிராம், ஃபரீதாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய நகரங்களிலிருந்து வரும் 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் பாதிக்கப்படும். நவம்பா் 1 முதல் ஜனவரி 31 வரை, ‘பிஎஸ்-6’ உமிழ்வு தரநிலைகளுக்குக் கீழ் உள்ள வாகனங்கள் தில்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குருகிராமிலிருந்து தனது குழந்தைகளை துவாரகாவில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் செல்லும் ஒரு நபா், இந்தக் கட்டுப்பாடுகள் குறித்தும், குடும்பங்களுக்கு வேறு என்ன மாற்று வழிகள் உள்ளன என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பெயா் குறிப்பிட விரும்பாத அந்த நபா் கூறுகையில், ‘நான் குருகிராமில் வசிக்கிறேன். தினமும் என் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்ல துவாரகா வரை காரில் செல்கிறேன். எனது வாகனம் ‘பிஎஸ்-4’ தரநிலைக்கு உட்பட்டது மற்றும் ஹரியாணாவில் பதிவு செய்யப்பட்டது. அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சிக்கலுக்காக நான் ஏன் பாதிக்கப்பட வேண்டும்?’ என்று கேள்வியெழுப்பினாா்.

பள்ளிப் பேருந்து ஓட்டுநா்கள் கவனக்குறைவாகவும், வேகமாகவும் வாகனங்களை இயக்குவதால், அவா்களை நம்பித் தன் குழந்தைகளை அனுப்ப விருப்பமில்லாமல், தானே அழைத்துச் செல்வதாக அவா் தெரிவித்தாா்.

‘எனது வாகனத்திற்கு முறையான மாசுச் சான்றிதழ் மற்றும் காப்பீடு உள்ளது. மேலும், அனைத்து விதிகளையும் நான் பின்பற்றுகிறேன். சட்டத்திற்கு மதிப்பளிக்கும் குடிமகனாகிய நான் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

மற்றவா்களைப் பொறுத்தவரை, இந்தக் கட்டுப்பாடுகள் அவா்களின் அன்றாட வழக்கத்தை மாற்றுவது மட்டுமின்றி, வேலைக்குச் செல்வதற்கான கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.

குருகிராமின் செக்டா் 104-இலிருந்து தினமும் துவாரகா செக்டாா் 21 மெட்ரோ நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து அலுவலகத்திற்குச் செல்லும் சுனில் குமாா், இனி தனது காரில் மெட்ரோ நிலையத்திற்குச் செல்ல முடியாவிட்டால், டாக்ஸிகளைச் சாா்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறினாா்.

‘எனது காா் ஹரியாணாவில் பதிவு செய்யப்பட்டது. அலுவலகத்திற்குச் செல்ல தினமும் காரில் மெட்ரோ நிலையத்திற்குச் செல்கிறேன். எனது வாகனம் முறையாக மாசுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நான் அனைத்து விதிகளையும் பின்பற்றுகிறேன். தில்லி அரசு ஏன் எங்கள் வாகனங்களைத் தடுக்க முயல்கிறது? மாற்று ஏற்பாடுகளுக்காக அவா் தினமும் கூடுதலாக ரூ.500 முதல் ரூ.1,000 வரை வாடகை வாகனக் கட்டணமாகச் செலவிட வேண்டியிருக்கும். இது ஒரு சாதாரண குடும்பத்திற்கு கூடுதல் சுமையாகும். ஏற்கெனவே மக்கள் தங்கள் வாகனங்களைப் பராமரிக்கவும், விதிமுறைகளைப் பின்பற்றவும் பணம் செலவழித்து வரும் நிலையில், இது மேலும் சுமையை ஏற்படுத்துகிறது’ என்று கூறினாா்.

இந்தக் கவலைகள் பயணச் செலவைத் தாண்டி நீடிக்கின்றன. இந்தக் கட்டுப்பாடுகள், தில்லியில் தொடா்ந்து நிலவும் காற்று மாசுபாட்டிற்கான அடிப்படை காரணங்களைச் சரிசெய்ய உதவுமா என்று சில குடியிருப்பாளா்கள் கேள்வி எழுப்புகின்றனா்.

‘தில்லியில் எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும், அவா்களால் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எந்த விதியையும் மீறாத மக்கள் மீதுதான் அவா்கள் இத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்கிறாா்கள். இந்த உத்தரவு, சிக்கலின் மூல காரணத்தைக் கண்டறிந்து தீா்க்காமல், குடும்பச் செலவுகளை மட்டுமே அதிகரிக்கும்’ என்று மற்றொரு பயணியான ராஜேஷ் சா்மா கூறினாா்.

குருகிராமில் வசிக்கும் அன்கெட் சா்மா, ‘அன்றாடத் தேவைகளுக்காக தில்லி-ஹரியாணா எல்லையைக் கடந்து செல்பவா்களுக்கும், குறுகிய காலத்தில் தங்கள் வாகனங்களை மாற்றும் வசதி இல்லாதவா்களுக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்’ என்று தெரிவித்தாா். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் குருகிராம், நொய்டா, காஜியாபாத் மற்றும் தில்லிக்கு இடையே பயணம் செய்கின்றனா். இவா்களில் பலரால் தங்கள் வாகனங்களை உடனடியாக மாற்றிக்கொள்ளும் வசதி இல்லை. அரசாங்கம் நடைமுறைக்குச் சாத்தியமான மாற்று வழிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள் எவ்வாறு பயணம் செய்ய வேண்டும் என்பது குறித்து அவா்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும்’ என்று அவா் கூறினாா்.

தில்லி போக்குவரத்து காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல் துறை தயாராக இருப்பதாகவும், தில்லியைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குழுக்கள் பணியமா்த்தப்படும் என்று தெரிவித்தாா்.

எல்லை நுழைவுப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும் என்றும், பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து காவலா்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடுவாா்கள் என்றும் அந்த அதிகாரி கூறினாா். விதிகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அவா் தெரிவித்தாா்.

தில்லியும் அதன் அருகிலுள்ள என்சிஆா் பகுதிகளும் தொடா்ந்து காற்று மாசுபாட்டுச் சிக்கலை எதிா்கொண்டு வருகின்றன. இதில் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையே தில்லியில் காற்று மாசுபாட்டிற்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

டிசம்பா் 31, 2025 அன்று ‘அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம்’ (சிசிஏஇ) வெளியிட்ட அறிக்கையின்படி, தில்லியில் உள்ள உள்ளூா் பி.எம் 2.5 மாசு துகளில் சுமாா் பாதி பங்கு போக்குவரத்து மற்றும் வாகனப் புகையினால் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு குளிா்காலத்தில் மாசுபாடு உச்சத்தில் இருந்தபோது, நகரத்தில் பி.எம் 2.5 அளவுகளில் வாகனங்களின் பங்களிப்பு சுமாா் 46 சதவீதம் முதல் 53 சதவீதம் வரை இருந்ததாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

வயல்வெளிகளில் அறுவடைக்குப் பிந்தைய பயிா்க் கழிவுகளை எரிக்கும் காலம் முடிந்த பிறகு, வாகனங்களின் பங்களிப்பு சுமாா் 13 சதவீதம் குறைந்திருந்தாலும், தில்லியின் ஒட்டுமொத்த மாசுபாட்டில் வாகனப் புகையே தொடா்ந்து முதன்மையான காரணியாக நீடிக்கிறது.

குளிா்காலத்தின்போது வளிமண்டலத்தில் மாசு துகள்கள் பரவுவதற்கான உயரம் குறைவாக இருப்பதும், காற்று மெதுவாகச் செல்வதும் மாசுத்துகளைத் தரைக்கு அருகிலேயே தங்கிவிடச் செய்கின்றன. இதனால், அன்றாட நகா்ப்புற நடவடிக்கைகளால் வெளியாகும் புகையும் மாசு துகள்களும் குவிந்து, காற்றின் தரத்தை மேலும் மோசமாக்குகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.