5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட்! 16 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை ஆய்வு மையம்ஆயுதங்களால் மட்டுமே இனி போர் நடக்காது! பொருளாதாரத் தாக்குதல் மோசமானது: பிரதமர் மோடிதிண்டுக்கல்: பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!சுற்றுலாப் பயணிகள் கவனத்திற்கு...ஏற்காடு பயணத்தைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்!

கோவையில் கொட்டி தீர்க்கும் கனமழை: வாகன ஓட்டிகள் கடும் அவதி

கோவையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழை குறித்து...

Heavy rains lashed Coimbatore

கோவையில் கொட்டி தீர்க்கும் கனமழை - டிஎன்எஸ்

Updated On :

கோவையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆறு போல தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள, செம்மொழி பூங்கா அருகே சுமார் ஒரு மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக, பார்க்கேட் ரவுண்டானா பகுதியில் குளம் போல தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இதேபோன்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து பல்வேறு இடையூறுகள் எற்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை சிங்காஙல்லூர் பேருந்து நிலையத்தில் முழங்கால் அளவு மழை நீருடன் கழிவு நீர் தேங்கியதால், நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், பயணிகள் மற்றும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

கோவை அவிநாசி சாலை ஜி.டி.நாயுடு மியூசியம் அருகில் குளம்போல் தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

கோவை நஞ்சுண்டாபுரம் சாலை ஸ்ரீபதி காலனியில் சாலையில் உடைந்து வெளியேறும் சாக்கடை நீரால், அந்த பகுதியில், தற்போது வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல கோவை சுங்கம் பகுதியில் கனமழையால் சாலைகள், வீடுகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

கோவை புலியகுளம் கருப்பராயன் கோயில் வீதியில் தொடர் மழையால் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளநீரால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் வீடுகளில் தேங்கிய மழைநீரை வாளிகள் மூலம் வெளியேற்றும் அவலநிலை நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் அந்த பகுதி மக்கள் கடும் கவலைக்குள்ளாகி உள்ளனர்.

கோவை மாநகர பகுதிகளான வடவள்ளி, பாப்பநாயக்கன்புதூர், லாரி ரோடு, வெங்கடாபுரம், இடையர்பாளையம், வேலான்டிபாளையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகின்றது.

கனமழை காரணமாக சாலையில் ஆறு போல தண்ணீர் செல்வதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் நான்கு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். மேலும் 90 சதவிகித இருசக்கர வாகன ஓட்டிகள் ஆங்காங்கே மழைக்கு தஞ்சம் புகுந்தனர். இதனால் சாலை வெறிச்சோடியபடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் ,தற்போது மாநகரின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருப்பதால், மழை நீர் ஆறு போல ஓடுவதால் பள்ளத்தில் நீர் தேங்கி இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே விபத்துக்குள்ளாகி வருகின்றது. எனினும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாநகர் முழுவதும் வெப்பம் தணிந்து மிகவும் குளிர்ச்சியான சூழல் நிலவுகின்றது.

Heavy rains lashed Coimbatore: Motorists suffer greatly

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.