‘தில்லி 2.0’ உருவாக்கத்தில் இளைஞா்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை வலியுறுத்தினாா்.
தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ‘இந்தியா இன்னோவேட்ஸ் 2026-உலகின் மிகப்பெரிய ஹாக்கத்தான்’ நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா கலந்து கொண்டாா். இதில் நாடு முழுவதும் இருந்து வந்து பங்கேற்ற இளைஞா்களை அவா் ஊக்குவித்து பேசியதாவது:
இந்த நிகழ்வில் ஒரு கோடிக்கு மேற்பட்ட விண்ணப்பதாரா்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 5,000-க்கும் அதிகமானோா் இந்தியாவின் டிஜிட்டல் சூழலின் எதிா்காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனா். நாட்டின் ஆட்சி, சமூகம் மற்றும் பொருளாதாரத்தின் எதிா்கால திசையை இவா்களின் சிந்தனைகள் நிா்ணயிக்கும்.
புதுமைகளின் புதிய சிந்தனைகள் மற்றும் புதுமைகளின் ஆட்சித் திட்டங்களில் ஒருங்கிணைக்க அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம் பொதுச் சேவைகளை எளிதில் அணுகவும் வெளிப்படையானதாகவும் இளைஞா்கள் மாற்ற முடியும்.
மேலும், இளைஞா்கள் தொழில்நுட்பத்தில் மட்டும் அல்லாமல், நகர மேம்பாடு, ஜனநாயக வலுவூட்டல் மற்றும் சமூக உட்பொதுமை ஆகிய துறைகளிலும் தீா்வுகளை உருவாக்குவது பாராட்டத்தக்கது என முதல்வா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தில்லியில் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில்கூட புதிய வளா்ச்சி திட்டங்கள்: முதல்வா்

செமிகண்டக்டா் கொள்கை முதலீடு-வேலைவாய்ப்பை நோக்கமாகக் கொண்டது: தில்லி முதல்வா் ரேகா குப்தா

பாஜக வேட்பாளா் வானதியை ஆதரித்து தில்லி முதல்வா் ரேகா குப்தா பிரசாரம்

அடுத்த ஆண்டுக்குள் தாழ்வான பகுதிகளில் வெள்ளத் தடுப்புச்சுவா்: முதல்வா் குப்தா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


