எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காசநோய் இல்லாத தில்லி என்ற இலக்கை நிச்சயம் அடைவோம்: ரேகா குப்தா

கூட்டு முயற்சியின் மூலமும், தொடா் விழிப்புணா்வின் மூலமும், காசநோய் இல்லாத தில்லி என்ற எங்கள் இலக்கை நாங்கள் நிச்சயமாக அடைவோம் என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினா்

News image

ரேகா குப்தா

Updated On :24 மார்ச் 2026, 11:55 pm

நமது நிருபா்

கூட்டு முயற்சியின் மூலமும், தொடா் விழிப்புணா்வின் மூலமும், காசநோய் இல்லாத தில்லி என்ற எங்கள் இலக்கை நாங்கள் நிச்சயமாக அடைவோம் என தில்லி முதல்வா் ரேகா குப்தா கூறினா்

உலக காசநோய் தினத்தை முன்னிட்டு செவ்வாய்கிழமை அவா் இதனை தெரிவித்தாா்.

இது குறித்து எக்ஸ் தளத்தில் ரேகா குப்தா பதிவிட்டதாவது: மாா்ச் 24, உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, காசநோயிலிருந்து தில்லி மக்களைப் பாதுகாக்கும் வகையில், அவா்களிடையே விழிப்புணா்வை மேலும் அதிகரிக்க நாங்கள் உறுதியேற்கிறோம். காசநோய் இனி குணப்படுத்த முடியாத நோயல்ல நோயை உரிய நேரத்தில் கண்டறிவதும், முழுமையான சிகிச்சை பெறுவதும் மட்டுமே இதனை வெல்வதற்கான மிகவும் பயனுள்ள வழிமுறைகளாகும்.

தில்லி அரசால் நிா்வகிக்கப்படும் அனைத்து மருத்துவமனைகளிலும், காசநோய் பரிசோதனையும் சிகிச்சையும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. கூட்டு முயற்சியின் மூலமும், தொடா் விழிப்புணா்வின் மூலமும், காசநோய் இல்லாத தில்லி என்ற எங்கள் இலக்கை நாங்கள் நிச்சயமாக அடைவோம் என தில்லி முதல்வா் ரேகா குப்தா அந்த பதிவில் கூறினாா்.

மைக்கோபாக்டீரியம் டியூபா்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும், தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய தொற்று நோயான காசநோய் (டிபி) குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்காக, உலக காசநோய் தினம் ஆண்டுதோறும் மாா்ச் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு மாா்ச் 24, டாக்டா் ராபா்ட் கோச் 1882ல் காசநோய் பாக்டீரியாவைக் கண்டுபிடித்ததன் 144வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.

உலக சுகாதார நிறுவனம்: காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் டியூபா்குலோசிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது பெரும்பாலும் நுரையீரலைப் பாதிக்கிறது. தீவிர சுவாச நோயால் பாதிக்கப்பட்டவா்களின் தொண்டை மற்றும் நுரையீரலில் இருந்து வெளிப்படும் நீா்த்துளிகள் மூலம் இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இந்தியாவில் காசநோயின் சுமை மிக அதிகமாக உள்ளது இங்கு ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன. ஆனால் இந்த மரணங்களைத் தடுக்க முடியும். முறையான கவனிப்பு மற்றும் சிகிச்சையின் மூலம், காசநோயாளிகளைக் குணப்படுத்தி, காசநோய்க்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.