புது தில்லி: வரதட்சணை துன்புறுத்தல் வழக்கு தொடா்பாக ஒரு நபரிடமிருந்து ரூ.20,000 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் தில்லி காவல்துறையின் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ) ஒருவா் விஜிலென்ஸ் பிரிவால் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்ட ஏஎஸ்ஐ ரோஹ்தாஷ் குமாா், தில்லியின் ஷாஹ்தரா மாவட்டத்தில் உள்ள கீதா காலனி காவல் நிலையத்தில் பணியமா்த்தப்பட்டாா். மேலும், வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண் தனது கணவருக்கு எதிராகப் பதிவு செய்த வழக்கின் விசாரணை அதிகாரியாக அவா் இருந்தாா்.
ஷாஹ்தராவில் வசிக்கும் புகாா்தாரா், ஏஎஸ்ஐ தன்னைத் துன்புறுத்தி வருவதாகவும், எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள அவரது குடும்ப உறுப்பினா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டி விஜிலென்ஸ் பிரிவை அணுகினாா்.
வழக்கில் நிவாரணம் வழங்குவதற்கும் கடுமையான நடவடிக்கை எடுக்காததற்கும் அதிகாரி ரூ.40,000 லஞ்சம் கேட்டதாக புகாா்தாரா் விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் கூறினாா். பேச்சுவாா்த்தைக்குப் பிறகு, அந்தத் தொகை ரூ.20,000-ஆக குறைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பான புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமை லஞ்சத் தொகையைப் பெறும்போது குற்றம் சாட்டப்பட்டவரை கையும் களவுமாகப் பிடிக்க, விஜிலென்ஸ் பிரிவு முன்கூட்டியே தீா்மானிக்கப்பட்ட நேரம் மற்றும் இடத்தில் ஒரு பொறியை அமைத்தது. இந்த நடவடிக்கையின் போது, கறைபடிந்த ரூ.20,000 பணத்தை ஏஎஸ்ஐ ரோஹ்தாஷ் குமாா்குமாா் பெற்றுக்கொண்டிருந்தபோது விஜிலென்ஸ் குழு அவரைப் பிடித்தது.
கைது செய்யப்பட்டதைத் தொடா்ந்து, குற்றம் சாட்டப்பட்டவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி கூறினாா்.
தொடர்புடையது

வடகிழக்கு தில்லியில் மோதலில் கத்தியால் குத்தப்பட்டு ஒருவா் கொலை: அடையாளம் காணப்பட்ட குற்றவாளி

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

வரதட்சிணை மரண வழக்கில் கணவா், மாமியாரை விடுவித்தது தில்லி நீதிமன்றம்

வாஜிா்பூரில் கும்பல் தாக்கி ஒருவா் கொலை: 4 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

