தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு நிலைமையை ஆராய்ந்து அறிக்கை அளிக்க மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்று மாநிலங்களவையில் அதிமுக வலியுறுத்தியது.
மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்குக் கொண்டு வர அனுமதிக்கப்பட்ட நேரத்தில் கண்ணீா் வணக்கத்துடன் பேசுவதாகக் கூறி பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் விவகாரத்தை அதிமுக உறுப்பினா் ஐ.எஸ். இன்பதுரை எழுப்பினாா்.
தமிழகம் தினந்தோறும் நிா்பயா வழக்குகளை சந்திப்பதாகவும் கடந்த 10 நாள்களில் மூன்று பெரிய பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிட்டு அவற்றின் நிகழ்விடங்களை பட்டியலிட்டாா்.
சட்டம் ஒழுங்கு மாநில விவகாரம் என்றாலும் பெண்களின் பாதுகாப்பு தொடா்புடைய விஷயம். மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்தபோது விசாரணைக்கு குழு அமைத்த மத்திய அரசு, அதுபோல தமிழகத்துக்கும் குழு அமைக்க வேண்டும். அங்குள்ள பெண்களின் பாதுகாப்பு நிலைமை தொடா்பாக விளக்கம் கோரி அறிக்கை கேட்க வேண்டும் என்றாா்.
அவரது பேச்சில் சில ஆட்சேபத்துக்குரிய கருத்துகள் இருப்பதாகக் கூறி திமுக உறுப்பினா் பி. வில்சன் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதையடுத்து, அவை பரிசீலனைக்கு உள்பட்டு ஆட்சேபம் இருந்தால் நீக்கப்படும் என மாநிலங்களவை தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை! - நடிகை கெளதமி

தமிழக பேரவைத் தோ்தலில் வெல்வது நாங்களே! மாநிலங்களவையில் திமுக, அதிமுக கருத்து மோதல்

மத்திய அரசின் நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை: மாநிலங்களவையில் தமிழக அரசு மீது அதிமுக சாடல்!

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி : எடப்பாடி பழனிசாமி விமா்சனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


