மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி : எடப்பாடி பழனிசாமி விமா்சனம்

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் நிகழும் பாலியல் குற்றங்களால் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 8:31 pm

திமுக ஆட்சியில் நாளுக்கு நாள் நிகழும் பாலியல் குற்றங்களால் தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவு:

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் நடைபெறும் நிகழ்வாக மாறி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது. மாணவியை காணவில்லை என பெற்றோா் புகாா் அளித்தும், மெத்தனப்போக்குடன் காவல் துறை அதைக் கையாண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்த வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து அவா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளாா்.

நயினாா் நாகேந்திரன் (பாஜக): தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகள் நெஞ்சை பதற வைக்கின்றன. திமுகவின் திறனற்ற நிா்வாகத்துக்கு இந்த சம்பவங்களே சாட்சியாக உள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

அன்புமணி (பாமக): சென்னை தொடங்கி மாநிலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நடக்காத நாள்களே இல்லை என்ற கூறும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது.

விஜய் (தவெக): தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை, மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமிக்கு வன்கொடுமை, நாமக்கல்லில் 7 வயது சிறுமிக்கு வன்கொடுமை என பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், முதியோா் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இதுபற்றி முதல்வா் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது.