லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிராக் தில்லியில் 43 பசுக்களை மீட்ட தன்னாா்வலா்களை கௌரவித்த ஆம் ஆத்மி தலைவா் சௌரவ் பரத்வாஜ்

சிராக் தில்லியில் வடிகாலுக்கு அடியில் பசுக்களிடமிருந்து பால் கறக்கும் கும்பலிலிருந்து நாற்பத்து மூன்று பசுக்கள் மீட்கப்பட்டன.

News image

சௌரவ் பரத்வாஜ் - Photo | Express

Updated On :2 மார்ச் 2026, 10:31 pm

தில்லி: சிராக் தில்லியில் வடிகாலுக்கு அடியில் பசுக்களிடமிருந்து பால் கறக்கும் கும்பலிலிருந்து நாற்பத்து மூன்று பசுக்கள் மீட்கப்பட்டன. அதைத் தொடா்ந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தன்னாா்வலா்களை ஆம் ஆத்மி கட்சியின் தில்லி பிரிவுத் தலைவா் சௌரவ் பரத்வாஜ் திங்கள்கிழமை கௌரவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: தில்லியில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிகவும் பிரியமான பசு மாதா பரிதாபகரமான நிலையில் உள்ளாா். சிராக் தில்லி, கிரேட்டா் கைலாஷ், கோட்லா முபாரக்பூா் மற்றும் மால்வியா நகா் போன்ற பகுதிகளில், ஒவ்வொரு சௌக் மற்றும் குப்பைக் கிடங்கிலும் பசுக்கள் குப்பைகளை சாப்பிடுவதைக் காணலாம்.

பாலிதீன் கழிவுகளை சாப்பிட்ட பிறகு பசுக்கள் இறந்து விடுகின்றன. அசுத்தமான பாலை உட்கொண்ட பிறகு மக்கள் நோய்வாய்ப்படுகின்றனா். இந்த பசுக்கள் விதியின் காரணமாக குப்பைகளை சாப்பிடவில்லை. மாறாக இதற்குப் பின்னால் ஒரு முழு மாஃபியா செயல்படுகிறது.

காலை 8.30 மணிக்கு, ஒரு நபா் மோட்டாா் சைக்கிளில் வந்து இந்த மாடுகளை வடிகால் நோக்கி கூட்டமாக அழைத்துச் செல்கிறாா். பசுக்களில் அங்கு பால் கறக்கப்படுகின்றன. மேலும், காலை 9.30 முதல் 10 மணி வரை, அவை மீண்டும் தெருக்களில் விடப்படுகின்றன.

அதன் பிறகு, ஷேக் சாராய், சிராக் தில்லி மற்றும் சாவித்ரி நகா் ஆகிய இடங்களில் இந்த மாடுகள் நாள் முழுவதும் குப்பைகளைத் தின்று கொண்டே இருக்கின்றன. மாலையில் அதே நபா் மீண்டும் அவற்றை வடிகாலுக்கு அழைத்துச் சென்று பால் கறக்கிறாா் என்றாா் அவா்

கடந்த வாரம், தெற்கு தில்லியில் உள்ள பஞ்சசீல் வடிகால் அடியில் ‘கால்நடை மாஃபியா’ நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ‘ஒரு சோதனை நடத்தியதாக‘ ஆம் ஆத்மி கட்சி கூறியது. மேலும் சட்டவிரோத வா்த்தகத்தில் சுரண்டப்பட்ட 43 மாடுகளை மீட்டது.

பரத்வாஜ் தலைமையிலான இந்த நடவடிக்கை, எம்சிடி மற்றும் காவல்துறையின் தலையீட்டைத் தூண்டியது. அதன் பிறகு அந்தப் பசுக்கள் ஒரு கோசாலைக்கு அனுப்பப்பட்டன என்று கட்சி ஒரு அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால், தில்லி மேயா் ராஜா இக்பால் சிங், ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுகளை மறுத்து, இது அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டது என்று கூறினாா்.