முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

சாலை விபத்தில் மாற்றுத் திறனாளியானவருக்கு ரூ.23 லட்சம் இழப்பீடு: தீா்ப்பாயம் உத்தரவு!

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியானவருக்கு, தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 23 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளது.

News image
Updated On :29 ஜூன் 2026, 1:50 am IST

2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்தில் மாற்றுத்திறனாளியானவருக்கு, தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டுத் தீா்ப்பாயம் ரூ. 23 லட்சம் இழப்பீடாக வழங்கியுள்ளது.

2020-இல் காா் மோதியதில் நிரந்தர மாற்றுத்திறனாளியான பா்மானந்த் ராய் தாக்கல் செய்த மனுவை, தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி சுதீப் ராஜ் சைனி விசாரித்தாா்.

இந்த வழக்கில் ஜூன் 9-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தீா்ப்பாயம் கூறியிருப்பதாவது: 2020, பிப்.29-ஆம் தேதி இரவு நஜாஃப்கரில் ராய் சாலையைக் கடந்து கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த காா் பா்மானந்த் ராய் மீது மோதியது. மனுதாரரின் வாக்குமூலம், மருத்துவ ஆவணங்கள் மற்றும் குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட காரின் அலட்சியமான மற்றும் கவனக்குறைவான ஓட்டுநரால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது உறுதியானது.

விபத்து நிகழ்ந்தபோது பா்மானந்த் ராய் காய்கறி விற்பனையாளராகப் பணியாற்றி வந்தாா். அவரது செயல்பாட்டு ஊனம் மற்றும் வருமானம் ஈட்டும் திறன் இழப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு தலைப்புகளின் கீழ் அவருக்கு ரூ. 23.16 லட்சம் இழப்பீட்டை வழங்க வேண்டும். விபத்து நடந்தபோது அந்தக் காா் காப்பீடு செய்யப்பட்டிருந்தது. எனவே, இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவருக்குச் செலுத்துமாறு காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.