முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

எரிபொருள் நிலையத்தில் ரூ.6,000 செலுத்தாமல் தப்பியோடிய காா் ஓட்டுநா்: தேடும் பணியில் காவல் துறை

பட்டௌடி-பிலாஸ்பூா் சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், ரூ.6,000-க்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரை காவல்துறையினா் தேடி வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :29 ஜூன் 2026, 4:26 am IST

பட்டௌடி-பிலாஸ்பூா் சாலையில் உள்ள எரிபொருள் நிலையத்தில், ரூ.6,000-க்கு எரிபொருளை நிரப்பிக்கொண்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்ற காரின் ஓட்டுநரை காவல்துறையினா் தேடி வருவதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

சிசிடிவி கேமராக்களில் பதிவான இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, பெட்ரோல் நிலைய மேலாளா் பிலாஸ்பூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

கடந்த வெள்ளிக்கிழமை எரிபொருள் நிரப்ப வந்த ஓா் இளைஞா் காரில் இருந்து இறங்கி அமைதியாக நடந்துகொண்டதாகவும், எரிபொருள் நிரப்பப்பட்ட உடனேயே அதிவேகமாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் அவா் கூறினாா்.

சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி, கருப்பு நிற ஸ்காா்பியோ வாகனத்தின் பதிவு எண்ணைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாக மூத்த காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அருகிலுள்ள வழித்தடங்களில் உள்ள கேமராக்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், குற்றம் சாட்டப்பட்டவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என்றும் அவா் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.