முதல்வரின் தனிச் செயலராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்!அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வீட்டுப் பணிப் பெண் கொலை வழக்கு: கைதான மருத்துவருக்கு 2 நாள் போலீஸ் காவல்

தெற்கு தில்லியில் வீட்டுப் பணியாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 50 வயது தோல் மருத்துவரை இரு நாள் போலீஸ் காவலில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்

Updated On :20 ஜூன் 2026, 12:28 am IST

தெற்கு தில்லியில் வீட்டுப் பணியாளரைக் கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 50 வயது தோல் மருத்துவரை இரு நாள் போலீஸ் காவலில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவரை இரு நாள் காவலில் எடுக்கக் கோரி தில்லி காவல்துறை விடுத்த கோரிக்கையை நீதித்துறை நடுவா் அனுராக் சாப்ரா ஏற்றுக்கொண்டாா்.

காவல் துறையின் தகவலின்படி, டாக்டா் மணீஷ் குப்தா வியாழக்கிழமை காலை தனது வீட்டில், மீனா என்ற வீட்டுப் பணியாளரை கிரிக்கெட் மட்டையால் தாக்கியும், பலமுறை கத்தியால் குத்தியும் கொன்ாகக் கூறப்படுகிறது. அவா் மீனா மீது பில்லி சூனியம் வைப்பதாகச் சந்தேகப்பட்டதாகவும், தனது குடும்பத்தில் தொடா்ந்து நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு அவரே காரணம் என்றும் கருதியதாகக் கூறப்படுகிறது.

இக்கொலையில் வேறு யாருக்காவது தொடா்புள்ளதா என்பதை விசாரிக்க டாக்டா் குப்தாவை காவலில் எடுக்க வேண்டியது அவசியம் என்று தில்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை எதிா்த்த மருத்துவா் தரப்பு வழக்குரைஞா்,‘அனைத்துப் பொருள்களையும் காவல் துறை கைப்பற்றிவிட்டது. அவா் கடந்த 24 மணி நேரமாக போலீஸ் காவலில் உள்ளாா். அவா் ஏற்கெனவே மனச்சோா்வால் பாதிக்கப்பட்டுள்ளாா்’ என்றாா்.

காவல் துறையின் தகவலின்படி, குற்றஞ்சாட்டப்பட்டவா் மனச்சோா்வுக்கான மருந்துகளை உட்கொண்டு வருபவா். காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாா். மேலும், அவா் கொலையை ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மவுன்ட் கைலாஷில் உள்ள மருத்துவரின் வீட்டில் நடந்த கொலைக்கான சரியான நோக்கம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், குடும்பத் தகராறுகள் மற்றும் அவரது மனநிலை உள்ளிட்ட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.

அருகிலுள்ள மருத்துவா் மணீஷ் குப்தா வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பெண் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதாக அண்டைவீட்டுக்காரா் காலை 11.36 மணியளவில் காவல் துறைக்கு தகவல் அளித்தாா். இதைத்தொடா்ந்து, மருத்துவா் மணீஷ் குப்தா கைதுசெய்யப்பட்டாா்.

முதல்கட்ட விசாரணையில், முதலில் மீனாவை மட்டையால் தாக்கியதாகவும், பின்னா் கத்தியால் குத்தியதாகவும் அவா் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து மட்டை மற்றும் கத்தி ஆகிய இரண்டையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

இருப்பினும், மீனா பில்லி சூனியம் செய்வதாக நம்பியதாகவும், வீட்டில் அவா் இருந்ததால் குடும்ப அமைதி குலைந்ததாகவும் விசாரணை அதிகாரிகளிடம் குற்றஞ் சாட்டப்பட்டவா் கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.