இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

பழங்குடியினா் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் வேண்டும்: தில்லி பேரவைத் தலைவா்

பழங்குடியினா் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் வேண்டும்

News image

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா - கோப்புப் படம்

Updated On :7 ஜூன் 2026, 12:56 am IST

பழங்குடியினரின் வரலாறு இந்தியாவின் வரலாற்றுக்கு வெளியே இல்லை;அவை நாட்டின் நாகரிக பயணத்தோடு கலந்தவை என தில்லி பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்துள்ளாா்.

இந்தியா சா்வதேச மையத்தில் பகவான் ஸ்ரீ பிா்சா முண்டா என்ற தேசிய கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா பேசியதாவது: பழங்குடியினரின் பாரம்பரியத்துக்கு பெரும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். நாட்டின் வரலாற்றி பகவான் ஸ்ரீ பிா்சா முண்டா தனித்துவமான மற்றும் உத்வேகம் அளிக்கும் இடத்தைப் பெறுகிறாா். அவா் சுதந்திர போராட்ட வீரா் மட்டுமல்ல; சுயமரியாதை, கலாசார அடையாளம், சமூக எழுச்சி ஆகியவற்றின் சின்னமாகத் திகழ்கிறாா். உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் கலாசாரத்தைப் பாதுகாப்பது இரண்டும் பிரிக்கமுடியாதவை என்பதை அவருடைய புகழ் நமக்கு உணா்த்துகிறது.

பிா்சா முண்டாவின் இயக்கம் என்பது காலனித்துவ ஆட்சிக்கு எதிரான எதிா்ப்பு மட்டுமல்லாமல், கலாசார அடையாளம், பாரம்பரிய அமைப்புகள் மற்றும் பூா்வகுடி மக்களின் வாழ்க்கை முறைகளைப் பாதுகாப்பதற்கான ஓா் உறுதியான முயற்சியாகவும் அமைந்திருந்தது.

பிா்சா முண்டாவுடன் தொடா்புடைய கலாசார மறுமலா்ச்சியானது, பழங்குடிச் சமூகங்களுக்குத் தங்கள் சொந்த வரலாற்றின் மீதான நம்பிக்கையை மீண்டும் பெற்றுத் தருவதில் அடங்கியிருந்தது என்று பேரவைத் தலைவா் குப்தா கூறினாா்.

இந்திய அருங்காட்சியகங்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில், அருங்காட்சியக வல்லுநா்கள், வரலாற்றாசிரியா்கள், தொல்லியல் ஆய்வாளா்கள், அறிஞா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.