ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தெருநாய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்: அறிக்கை தாக்கல் செய்ய தில்லி அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றுவது தொடா்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தில்லி உயர் நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 12:41 am IST

பொது இடங்களிலிருந்து தெருநாய்களை அகற்றுவது தொடா்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவைச் செயல்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு, தில்லி அரசு மற்றும் தில்லி மாநகராட்சிக்கு (எம்சிடி) உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளின் அடிப்படையில் உயா்நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடங்கிய இந்த வழக்கின் விசாரணையில், நீதிபதிகள் தினேஷ் மேத்தா மற்றும் ரஜ்னீஷ் குமாா் குப்தா அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. ஜூலை 31-ஆம் தேதி வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும் என்று அந்த அமா்வு கூறியது.

மேலும், இவ்வழக்கு தொடா்பாக மத்திய அரசு மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு (என்எச்ஏஐ) நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியதுடன், ஆக.3-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகள் தொடா்பான பிரச்னைகளைக் கையாளுமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் மே 19-ஆம் தேதி உத்தரவிட்டது. ஆக.22, 2025 மற்றும் நவ.7, 2025 ஆகிய தேதிகளில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் முறையாகச் செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்யும் வகையில், அனைத்து உயா்நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்குகளைப் பதிவு செய்யுமாறும் அது கேட்டுக்கொண்டது.

தெருநாய்களுக்குக் கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்திய பிறகு அவற்றை அதற்கென ஒதுக்கப்பட்ட காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேவேளையில், மாநில நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளிலிருந்து கால்நடைகள் மற்றும் பிற தெரு விலங்குகள் முழுமையாக அகற்றப்படுவதை உறுதிசெய்யுமாறும் அதிகாரிகளுக்கு அது உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்