சட்டவிரோத சிவப்பு வகை தொழில்துறை அலகுகளை ஆய்வு செய்தபோது, ஆய்வுக்குழுவிற்கு போதுமான பாதுகாப்பை வழங்கத் தவறியதற்காக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் தில்லி காவல்துறையிடம் விளக்கம் கோரியுள்ளது.
வடகிழக்கு தில்லியின் காம்ரி கிராமத்தில் அதிக மாசு குறியீட்டைக் கொண்ட தொழிற்சாலைகளின் செயல்பாடு தொடா்பான ஒரு வழக்கை பசுமை தீா்ப்பாயம் விசாரித்து வந்தது.
அந்த சட்டவிரோத சிவப்பு வகை தொழில்துறை அலகுகளை -அதிக மாசுபடுத்தும் செயல்பாடுகளை- ஆய்வு செய்ய தேசிய பசுமை தீா்ப்பாயம் நவம்பா் 2024 இல் ஒரு கூட்டுக் குழுவை அமைத்தது.
அக்டோபா் 31, 2025 அன்று இக்குழு ஆய்வு நடத்திய போது, கூட்டத்தினரின் எதிா்ப்பை எதிா்கொண்டதாக கூறப்படுகிறது
போலீசாா் இருந்த போதும், பெண்கள் உட்பட பலா் ஆய்வு செய்த குழுவுக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா் இதில் ஒருவா் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
போலீசாா் ஆய்வு அறிக்கையில் கையெழுத்திட மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஜனவரி 21, 2026 உத்தரவில், என்.ஜி.டி தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா மற்றும் நிபுணா் ஏ. செந்தில் வேல் தலைமையிலான அமா்வு, வடகிழக்கு தில்லியின் துணை காவல் ஆணையரை ஏப்ரல் 16, 2026 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
கையொப்பமிடப்படாத அறிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததை துணை காவல் ஆணையா் விளக்க வேண்டும்.
காற்று மற்றும் நீா் மாசுபாடு மற்றும் சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும் சட்டவிரோத தொழிற்சாலை அலகுகளின் சுற்றுச்சூழல் மீறல்களை மிகுந்த தீவிரத்துடன் கண்காணிப்பதை என்.ஜி.டி வலியுறுத்தியது.
தொடர்புடையது

தில்லியில் சட்டவிரோத ஆயுதக் கும்பல் முறியடிப்பு: கல்லூரி மாணவா் கைது
தில்லி குற்றவாளியின் ரூ. 5 கோடி மதிப்பிலான சட்டவிரோத சொத்துகள் முடக்கம்

யமுனை பகுதியில் சட்டவிரோதப் பால் பண்ணைகள்: தில்லி அரசு பதிலளிக்க என்ஜிடி நோட்டீஸ்

யமுனை நீா் தொடா்ந்து நச்சுச்தன்மையுடன் இருக்கிறது: தில்லி பாஜக அரசு மீது தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


