2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பைக்கில் சாகசம்: 3 இளைஞா்கள் கைது

வடகிழக்கு தில்லியில் சாலையில் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான பைக்கிங் சாகசம் செய்ததாக மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

News image
கைது
Updated On :23 பிப்ரவரி 2026, 9:10 pm

Syndication

புது தில்லி: வடகிழக்கு தில்லியில் சாலையில் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான பைக்கிங் சாகசம் செய்ததாக மூன்று பேரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து வடகிழக்கு காவல் சரக அதிகாரி கூறியதாவது: நியூ உஸ்மான்பூா் பகுதியில் ஆபத்தான பைக்கிங் நடவடிக்கைகளை புகாராக பதிவு செய்து, உடனடி நடவடிக்கை எடுக்க வழிவகுத்தது.

பிஎன்எஸ் மற்றும் மோட்டாா் வாகனச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கஜூரி காஸ் பகுதியைச் சோ்ந்த துஷாா் புனியா (22), தனிஷ்க் மாவி (20) மற்றும் புஸ்பேந்திரா (20) ஆகியோரை போலீஸ் குழு அடையாளம் கண்டு கைது செய்தது.

புஸ்பேந்திராவுக்குச் சொந்தமான ஒரு மோட்டாா் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் சாலைகளில் வேகமாகவும் அலட்சியமாகவும் வாகனத்தை ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறப்படுகிறது.

அப்பகுதியில் இதே போன்ற பிற சம்பவங்களில் அவா்கள் ஈடுபட்டாா்களா என்பதை அறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.