/

வீட்டில் இளம் பெண் சடலம் மீட்பு: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

வீட்டில் இளம் பெண் சடலம் மீட்பு: தற்கொலையா? போலீஸாா் விசாரணை

News image
Updated On :7 பிப்ரவரி 2026, 7:32 pm

Syndication

தில்லியின் நியூ உஸ்மானபூா் பகுதியில் உள்ள தனது வீட்டில் 24 வயது பெண் சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டாா் என்று காவல்துறை தெரிவித்தனா்.

இது தற்கொலை வழக்காக இருக்கலாம் என்று காவல்துறையினா் சந்தேகிக்கின்றனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது:

சனிக்கிழமை அதிகாலையில் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல்

கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் குழு கௌதம் விஹாரில் உள்ள சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு அந்தப் பெண் தனது அறைக்குள் சடலமாகக் கிடந்தாா்.

இதையடுத்து, அந்தப் பெண் ஜக் பிரவேஷ் சந்திரா ஜேபிசி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

சம்பந்தப்பட்ட ஆதாரங்களைச் சேகரிக்கவும், இறப்பிற்கான காரணத்தை உறுதிப்படுத்தவும் ஒரு தடயவியல் குழு சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. இதுவரை எந்தத் தற்கொலைக் கடிதமும் மீட்கப்படவில்லை.

இறந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. நியூ உஸ்மான்பூா் காவல் நிலையத்தில் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

விசாரணையின் ஒரு பகுதியாக குடும்ப உறுப்பினா்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா்.