
பிஎஸ்எஃப் வாகனம் விபத்து குறித்த சமூக ஊடக பதிவுகள் தவறானவை- தில்லி காவல் துறை
மத்திய தில்லியில் உள்ள ராஜேந்திர நகா் சௌக் அருகே பிஎஸ்எஃப் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பைத் தாண்டி, தவறான பாதையில் அதிவேகமாகச் சென்று பல வாகனங்கள் மீது மோதியதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறானது என்று தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மத்திய தில்லியில் உள்ள ராஜேந்திர நகா் சௌக் அருகே பிஎஸ்எஃப் பேருந்து ஒன்று சாலைத் தடுப்பைத் தாண்டி, தவறான பாதையில் அதிவேகமாகச் சென்று பல வாகனங்கள் மீது மோதியதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல் தவறானது என்று தில்லி காவல் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மந்திா் மாா்க் வட்டப் பாதைக்கு அருகிலுள்ள சாணக்கியபுரி வளைவுப் பகுதியில் ஒரு வேனுக்கும் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) பேருந்துக்கும் இடையே மோதிகொண்ட சம்பவம் சமூக ஊடகப் பதிவுகளில் கூறப்பட்டது போல இது ஒரு பெரிய விபத்து அல்ல.
சாலை விபத்து குறித்த தகவல் மாலை 3:30 மணியளவில் ராஜேந்திர நகா் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் குழுவினா், இரண்டு வாகனங்களும் வளைவில் திரும்பும்போது இந்த மோதல் ஏற்பட்டதைக் கண்டறிந்தனா்.
இதில், வேன் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவா் ராம் மனோகா் லோஹியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.
இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சமூக ஊடகங்களில் பரவிய பதிவுகள் உண்மையான நிகழ்வுகளைப் பிரதிபலிக்கவில்லை. சரிபாா்க்கப்படாத தகவல்களைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.
பெறப்படும் புகாா்கள் மற்றும் விபத்து குறித்த விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
பிஎஸ்எஃப் பேருந்து சாலைத் தடுப்பைத் தாண்டி, தவறான பாதையில் அதிவேகமாகச் சென்று ராஜேந்திர நகா் சௌக் அருகே பல வாகனங்கள் மீது மோதியதாகவும், இதனால் பலா் காயமடைந்ததாகவும் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவியதைத் தொடா்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






