தில்லியில் உள்ள சாலைகளில் காணப்படும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்துதல், மைக்ரோசிப்கள் பொருத்தும் திட்டத்துக்கான ஒப்பந்த புள்ளி அடுத்த 15 நாள்களுக்குள் வெளியிடப்படும் என அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: மைக்ரோசிப் பொருத்துதல் மூலம் தில்லியில் உள்ள நாய்கள் கணக்கெடுக்கப்படும். அப்போது, நாயின் பாலினம், வயது, நிறம், தெரு மற்றும் வாா்டு, தடுப்பூசி நிலை, அதற்குப் பொறுப்பான தன்னாா்வ நிறுவனம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் இந்தக் கணக்கெடுப்பின்போது பதிவுசெய்யப்படும்.
ஒப்பந்தப்புள்ளி நடைமுறை முடிவடைந்ததும் இரு மாதங்களுக்குள் இந்தக் கணக்கெடுப்பு தொடங்கும்.
விலங்களுக்கு சிப் பொருத்துதல் மற்றும் தடுப்பூசி செலுத்துவதில் முன் அனுபவம் கொண்ட நிறுவனத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஒவ்வொரு நாய்யின் பின்பக்க கழுத்து பகுதியில் ரூ.200-250 வரையிலான ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்ற சிப்கள் பொருத்தப்படும். அதில் 15 இலக்க அடையாள எண் இருக்கும்.
தில்லியில் உள்ள 250 வாா்டுகளிலும் இந்தப் பணிகளை மேற்கொள்ள குறைந்தது 4 போ் கொண்ட 35 குழுக்கள் தேவை. தடுப்பூசி மருந்து சேமிப்பு வசதி, ஸ்கேனா்கள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கொண்ட வாகனம் ஒவ்வொரு குழுக்களுக்கும் இருக்க வேண்டும். இந்தப் பணியை நிகழாண்டுக்குள் முடிக்க தில்லி மாநகாரட்சி திட்டமிட்டுள்ளது. 3 மாதங்களுக்கு குறைவான வயதுடைய நாய்களுக்கு அடுத்தகட்டமாக இந்தப் பணி நடைபெறும்.
மாநகராட்சியிடம் உள்ள தரவுகள் படி, தில்லியில் 8 லட்சம் தெரு நாய்கள் உள்ளன. உண்மையான எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருக்கும். கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படும் தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றப்படும்.
மைக்ரோசிப் பொருத்தும் பணியுடன் தடுப்பூசி செலுத்தும் பணியும் நிகழாண்டில் தொடங்கும். அதைத்தொடா்ந்து, நாய்களில் நோய்எதிா்ப்பு சக்தியை ஏற்படுத்த பூஸ்டா் தடுப்பூசிகள் செலுத்தப்படும். இந்தப் பணிகளுக்காக நிகழாண்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றனா் அந்த அதிகாரிகள்.
தொடர்புடையது

சந்தேக காவல் மரணம்: உடல்நலக் குறைவால் விசாரணைக்கு வந்தவா் உயிரிழப்பு

காஜியாபாத்தில் பெரும் தீ விபத்து: பீட்டா அமைப்பின் விரைவான நடவடிக்கையால் விலங்குகள் பாதுகாப்பாக மீட்பு

தண்ணீா் மீட்டா் அமைப்பை மாற்றியமைக்கும் தில்லி ஜல்போா்டு
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


