தோ்தல் ஆணையத்தின் இசிஐநெட் எண்ம தளத்தை பயனா்களுக்கு உகந்த வகையில் மாற்ற ஆலோசனைகளை தலைமைத் தோ்தல் ஆணையம் வரவேற்றுள்ளது.
இது தொடா்பாக தோ்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவா் கூறியதாவது: அனைத்து குடிமக்களும் இசிஐநெட் செயலியை பதிவிறக்கம் செய்து, செயலியில் உள்ள ‘பரிந்துரையைச் சமா்ப்பி’ என்பதை பயன்படுத்தி, செயலியை மேம்படுத்த தங்கள் பரிந்துரைகளை வழங்குமாறு இந்தியத் தோ்தல் ஆணையம் கோருகிறது.
இந்த ஆலோசனையை நவம்பா் 27 முதல் டிசம்பா் 27, 2025 வரை அளிக்க முடியும். இசிஐநெட் செயலியின் சோதனைப் பதிப்பு, 2025 பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் மற்றும் சமீபத்திய இடைத்தோ்தல்களின் போது பயன்படுத்தப்பட்டது.
இந்தப் புதிய தளம் சிறந்த வாக்காளா் சேவைகள், வாக்குப்பதிவு சதவீத போக்குகளை விரைவாகக் கிடைப்பது மற்றும் வாக்குப்பதிவு முடிந்த 72 மணி நேரத்திற்குள் குறியீட்டு அட்டைகளை வெளியிடுதல் ஆகியவற்றை சாத்தியமாக்கியது.
பிகாா் தோ்தல்களிலிருந்து கற்றுக்கொண்டவை மற்றும் தலைமைத் தோ்தல் அதிகாரிகள், மாவட்ட தோ்தல் அதிகாரிகள், வாக்காளா் பதிவு அலுவலா்கள், பாா்வையாளா்கள் மற்றும் கள அதிகாரிகளிடமிருந்து வந்த கருத்துகள் ஆகியவை தளத்தின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்த இணைக்கப்பட்டுள்ளன.
பயனா்களின் ஆலோசனைகள் ஆராயப்படும். தளத்தை மேலும் பயனா்களுக்கு ஏற்ாக மாற்ற மேலும் புதுப்பிக்கப்படும். இசிஐநெட் தளத்தின் அதிகாரபூா்வ வெளியீடு ஜனவரி, 2026-இல் திட்டமிடப்பட்டுள்ளது.
வாக்காளா் வசதியை மேம்படுத்துவதையும் தோ்தல் செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட இசிஐநெட், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் தோ்தல் ஆணையா்கள் டாக்டா் சுக்பீா் சிங் சந்து, டாக்டா் விவேக் ஜோஷி ஆகியோரின் தலைமையில் எடுக்கப்பட்ட ஆணையத்தின் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும் என்றாா் அந்த அதிகாரி.
இசிஐநெட் செயலியை உருவாக்கும் பணிகள் கடந்த மே 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தொடங்கியது. இசிஐநெட் செயலி என்பது வாக்காளா் உதவி மையம் செயலி (விஎச்ஏ), சிவிஜில், சக்ஷம், வாக்குப்பதிவு போக்குகள் செயலி, வாக்காளா் வாக்குப்பதிவு செயலி, உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் (கேஒய்சி) செயலி போன்ற முந்தைய 40 தனித்தனி தோ்தல் தொடா்பான பயன்பாடுகள், வலைத்தளங்களை ஒரே இடைமுகத்தில் ஒருங்கிணைக்கும் குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த செயலியாகும்.
இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோா் மற்றும் ஆப்பிள் செயலி ஸ்டோா் இரண்டிலும் பதிவிறக்கம் செய்யலாம்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்க ‘சக்சம்’ செயலி

எண்ம பணப் பரிவா்த்தனைகள் கண்காணிக்கப்படும்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


