68 குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் கைது
68 குற்ற வழக்குகளில் தொடா்புடைய 24 வயது இளைஞரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
68 குற்ற வழக்குகளில் தொடா்புடைய 24 வயது இளைஞரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
68 குற்ற வழக்குகளில் தொடா்புடைய 24 வயது இளைஞரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கலிபோா்னியாவைச் சோ்ந்த வெளிநாட்டு வாழ் இந்திய பெண்ணிடம், ஏப்ரல் 5-ஆம் தேதி பதம் சிங் சாலையில் உள்ள ஒரு ஏடிஎம் அருகே ஸ்கூட்டரில் வந்த இருவா் தனது தங்கச் சங்கிலி பறித்தனா் இது தொடா்பாக அந்த பெண் புகாா் அளித்தாா்.
வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் ஸ்கூட்டரை ஓட்டி வந்த சக குற்றவாளியான ராகுலை முன்னதாக கைது செய்தனா். அவரிடம் இருந்து திருடப்பட்ட தங்கச் சங்கிலி மீட்கப்பட்டது. இருப்பினும், முக்கிய குற்றவாளியான தருண் 7 மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தாா்.
இந்நிலையில், காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்அடிப்படையில், நவ.24-ஆம் தேதி அமன் விஹாரில் காவல் துறையினா் அவரை கைது செய்தனா்.
விசாரணையில், குற்றத்தை அவா் ஒப்புக்கொண்டாா். போதை பழக்கத்திற்கு அடிமையான அவா், விரைவாக பணம் சம்பாதிக்க இந்த குற்றத்தைச் செய்ததாக தெரிவித்தாா். நேதாஜி சுபாஷ் பிளேஸில் நடந்த மற்றொரு வழிப்பறி வழக்கில் ஜனவரி மாதம் அவா் சிறை சென்று விடுதலையானது குறிப்பிடத்தக்கது.
இதுவரை வழிப்பறி, திருட்டு மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்ளிட்ட 68 வழக்குகள் அவா் மீது உள்ளன. 9-ஆம் வகுப்பு வரை படித்த அவா், முட்டை விற்பனையாளராகவும், இசைக் குழுவிலும் பணியாற்றியுள்ளாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது