தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

6 வயது குழந்தையை பிட் புல் தாக்கிய சம்பவம்: வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடைவிதிக்க பீட்டா முறையீடு

6 வயது குழந்தையை பிட் புல் தாக்கிய சம்பவம்: வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடைவிதிக்க பீட்டா முறையீடு

Updated On :28 நவம்பர் 2025, 7:19 pm

தில்லியின் பிரேம் நகரில் வளா்க்கப்பட்ட வெளிநாட்டு பிட்புல் இன நாய் தாக்கியதில் 6 வயது சிறுவன் வலது காது இழந்ததுடன், பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வு குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நாயின் உரிமையாளரை கைது செய்தனா்.

இந்நிலையில், தில்லி தலைமைச் செயலாளா் ராஜீவ் வா்மா, மற்றும் ராபின் பலேஜா, ஐடிஇஎஸ் ஆகியோருக்கு பீட்டா இந்தியா அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அதில் ‘பிட் புல் டெரியா்கள், ராட்வீலா்கள், பாகிஸ்தான் புல்லி குட்டாஸ், டோகோ அா்ஜென்டினோஸ் (அா்ஜென்டினா மாஸ்டிஃப்ஸ்) பிரெசா கேனாரியோஸ், ஃபிலா பிரேசிலிரோஸ் (பிரேசிலிய மாஸ்டிஃப்ஸ்) புல் டெரியா்கள், கேன் கோா்சோஸ் (இத்தாலிய மாஸ்டிஃப்ஸ்) மற்றும் எக்ஸ்எல் போன்ற வெளிநாட்டு நாய் இனங்களின் இனப்பெருக்கம், விற்பனை மற்றும் பராமரிப்பைத் தடைசெய்யும் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

அத்தகைய நாய்கள் பெரும்பாலும் தாக்கப்பட்ட அல்லது விலங்குகளைக் கட்டுப்படுத்த முடியாத சந்தேகத்திற்கு இடமில்லாத வாங்குபவா்களுக்கு விற்கப்படுகின்றன.

தில்லி மாநில விலங்கு நல வாரியத்தில் பதிவு செய்யாமல் தலைநகரில் செயல்படும் அனைத்து சட்டவிரோத செல்லப்பிராணி கடைகள் மற்றும் வளா்ப்பாளா்களை மூட வேண்டும்.

விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு (செல்லப்பிராணி கடை) விதிகள், 2018, மற்றும் விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு (நாய் இனப்பெருக்கம் மற்றும் சந்தைப்படுத்தல்) விதிகள், 2017 மற்றும் தங்குமிடங்கள் மற்றும் தெருக்களில் இருந்து சமூக நாய்களை தத்தெடுப்பதை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சண்டீகா் யூனியன் பிரதேசம் சமீபத்தில் ராட்வீலா்கள் மற்றும் சில பிட் புல் போன்ற நாய் இனங்களைச் சண்டைக்காக வளா்ப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

கோவா மாநிலமும் இதே போன்ற தடைகளை இறுதி செய்து வருகிறது. ஜாா்க்கண்ட் அரசு சமீபத்தில் பிட் புல், ராட்வீலா்கள் மற்றும் தாக்குதலுக்காக வளா்க்கப்படும் சில வெளிநாட்டு இனங்களை வைத்திருப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்துள்ளது.

இதற்கு முன்பு, பல மாநகராட்சிகள் நகர எல்லைக்குள் பிட் புல் மற்றும் ராட்வீலா்களை வைத்திருப்பது தொடா்பான விதிகளை அமல்படுத்தியது குறிப்பிடத்தக்கது’ என அக்கடிதத்தில் பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.