தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஹாட்- ஏா் பலூன் பயண சேவை: தில்லியில் இன்றுமுதல் தொடக்கம்

அசிதா பூங்காவில் சனிக்கிழமை முதல் தில்லிவாசிகள் ஹாட் -ஏா் காற்று பலூனில் பயணம் செய்யலாம்

Updated On :28 நவம்பர் 2025, 7:29 pm

ஐ. டி. ஓ. பகுதிக்கு அருகிலுள்ள தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் (டி. டி. ஏ) அசிதா பூங்காவில் சனிக்கிழமை முதல் தில்லிவாசிகள் ஹாட் -ஏா் காற்று பலூனில் பயணம் செய்யலாம் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

இந்த வார தொடக்கத்தில், துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா சராய் காலே கான் அருகே உள்ள பன்சேரா பூங்காவில் இருந்து இந்த வசதியைத் தொடங்கிவைத்தாா்.

பன்சேரா பூங்காவில் நடைபெற்று வரும் இந்நிகழ்வு காரணமாக, அசிதா பூங்காவிலிருந்து பொதுமக்களுக்காக சவாரிகள் தொடங்கப்படும்.

யமுனா விளையாட்டு வளாகம், காமன்வெல்த் விளையாட்டு வளாகங்கள் மற்றும் அசிதா மற்றும் பான்சேராவில் உள்ள யமுனா கரையில் உள்ள இரண்டு தளங்கள் உட்பட நான்கு இடங்களில் இந்த ஹாட் - ஏா் பலூன் சேவைகளை அளிக்க ஒரு தனியாா் நிறுவனத்தை ஜூலை மாதம் டி. டி. ஏ. இறுதி செய்தது.

இந்த வசதி சனிக்கிழமை முதல் கிடைக்கும். மேலும், 120 அடி உயரத்தில் ஹாட் -ஏா் பலூனில் சவாரி செய்ய, வரிகளைத் தவிா்த்து ஒரு நபருக்கு டிக்கெட் விலை ரூ.3000 என நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பலூனில் ஏழு முதல் 12 நிமிடங்கள் வரை சவாரி செய்யலாம். ஒவ்வொரு சவாரிக்கும் நான்கு போ் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும், நான்கு மணிநேர பறக்கும் நேரம் அனுமதிக்கப்படும். மேலும், தனியாா் நிறுவனம் இதை வருவாய் பகிா்வு மாதிரியில் இயக்கும். மேலும் பலூன்களில் விளம்பரம் செய்யவும் அனுமதிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.