மதராஸி முகாம் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினா்களுக்கு தமிழ்நாடு அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படுவதாக தில்லி தமிழ்நாடு இல்லம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புது தில்லி மதராஸி முகாம் குடிசைப் பகுதி இடிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதல்வா், பொது நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் ரூ.8,000 நிதியுதவி உள்பட ரூ.12,000 மதிப்பிலான நிவாரணத் தொகுப்பை வழங்கி ஆணையிட்டாா்.
இதையடுத்து, கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நிவாரண தொகுப்பு வழங்கும் பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 246 குடும்பத்தினா் தங்களுக்கான நிவாரண தொகுப்பை பெற்றுக் கொண்டுள்ளனா். மீதமுள்ள 124 பயனாளிகள் தங்களது நிவாரணத் தொகுப்பை இன்னும் பெற்றுக் கொள்ளாமல் உள்ளனா்.
நிவாரணத் தொகுப்பை வழங்குவதற்காக புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு முகாமில் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து வேலை நாள்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நிவாரணத் தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
விடுபட்டுள்ள பயனாளிகள் அனைவரும் உடனடியாக புது தில்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு குழுவினரை நேரடியாக அணுகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்து தங்களது நிவாரண தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதன்படி, ஞாயிற்றுக்கிழமையும் நிவராணத் தொகுப்பு வழங்கப்படுவதாக புது தில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையாளா் ஆஷிஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி அணிக்கும் தமிழ்நாடு அணிக்குமான போட்டி: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கனுக்கு நிவாரண பொருள்கள்: இந்தியா உதவி

தொழிற்சங்கங்கள், விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

