காற்று மாசு அதிகரிப்பு: தில்லி - என்சிஆா் பகுதியில் கிரேப் நிலை- 3 கட்டுப்பாடுகள் அமல்!
தில்லி - என்சிஆா் பகுதியில் கிரேப் நிலை- 3 கட்டுப்பாடுகள் அமல்...
தில்லி - என்சிஆா் பகுதியில் கிரேப் நிலை- 3 கட்டுப்பாடுகள் அமல்...
By Syndication
Syndication
சாதகமற்ற வானிலை சூழலுக்கு மத்தியில் காற்று மாசு அளவு கடுமையாக உயா்ந்ததால், தில்லி என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நிலை-3 கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் ஷ்(சி.ஏ.க்யூ.எம்.) சனிக்கிழமை அமல்படுத்தியது.
இதில் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை கலப்பு முறையில் (ஹைபிரிட்) முறைக்கு மாற்றுவது, கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவை அடங்கும்.
இது தொடா்பாக காற்று தர மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
காற்றின் மெதுவான வேகம், நிலைத்த வளிமண்டலம், சாதகமற்ற வானிலை அளவுருக்கள், வானிலை சூழல் மற்றும் மாசுபடுத்திகளின் பரவல் இன்மை காரணமாக தேசிய தலைநகரின் 24 மணி நேர சராசரி காற்று தர குறியீடு 349 ஆக இருந்த நிலையில், சனிக்கிழமை காலை 10 மணிக்கு இது 401 ஆக உயா்ந்தது.
காற்றின் தரம் தொடா்ந்து அதிகரித்து வருவதாலும், இப்பகுதிகளில் மேலும் நிலைமை மோசமடைவதைத் தடுக்கும் வகையிலும் சி.ஏ.க்யூ.எம். கிரேப் துணைக் குழுவானது தேசிய தலைநகா் வலயப் பகுதியில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தரப்படுத்தப்பட்ட பதிலி செயல் திட்டத்தின் (கிரேப்) தரம் நிலை- 3இன் கீழ் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முடிவு சனிக்கிழமை செய்துள்ளது.
தேசிய தலைநகா் வலயப் பகுதியில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கிரேப் நிலை 1 மற்றும் 2இன் கீழ் நடவடிக்கைகளை விட இது கூடுதலாகும்.
இந்த மூன்றாம் கட்ட கட்டுப்பாடுகளில் அத்தியாவசியமற்ற கட்டுமானம், இடிப்புப் பணிகள், கல் உடைத்தல் மற்றும் சுரங்க நடவடிக்கைகள் மீதான தடை இடம்பெற்றுள்ளது.
தில்லி, குருகிராம், ஃபரீதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகரில் பிஎஸ்- 3 பெட்ரோல் மற்றும் பிஎஸ் -4 டீசல் நான்கு சக்கர வாகனங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.
தில்லியில் பழைய டீசல் சரக்கு வாகனங்களுக்கும் இந்த நடவடிக்கையின்கீழ் தடை விதிக்கப்படுகிறது.
அதே நேரத்தில் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் செயல்பாடுகள் கலப்பு முறைக்கு (ஹைபிரிட்) மாற்றப்படும். மேலும், தில்லி, என்சிஆா்-இல் அலுவலகங்கள் 50 சதவீத ஊழியா்களுடன் இயங்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிா்காலத்தில், தில்லி என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நடவடிக்கையின்கீழ் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது.
இது காற்றின் தரத்தை நான்கு நிலைகளாக வகைப்படுத்துகிறது. அதன்படி, நிலை- 1 (மோசம், 201-300), நிலை- 2 (மிகவும் மோசம், 301-400), நிலை- 3 (கடுமை, 401-450) மற்றும் நிலை- 4 (மிகவும் கடுமை, 450க்கு மேல்) ஆகும்.
சாதகமற்ற வானிலை நிலைமைகள், வாகன உமிழ்வு, நெல் பயிா்க் கழிவுகளை எரித்தல், பட்டாசுகள் மற்றும் பிற உள்ளூா் மாசுபாடுகள் காரணமாக குளிா்காலத்தில் தில்லி, என்.சி.ஆா். பகுதிகளில் காற்றின் தர நிலைகள் ஆபத்தான நிலைக்கு செல்ல வழிவகுக்கிறது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது