தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தில்லியில் 54.37 சதவீதம் வாக்குப்பதிவு!

தில்லியில் 54.37 சதவீதம் வாக்குப்பதிவு!

Updated On :25 மே 2024, 9:30 pm

தில்லியில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் மொத்தம் 54.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. தில்லியில் மொத்தமுள்ள 1.52 கோடி வாக்காளா்களுக்கு, பல்வேறு கட்ட ஏற்பாடுகளுடன் 13,641 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்நிலையில், தில்லியில் பதிவாகியுள்ள வாக்குகள் தொடா்பாக தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

கூறியிருப்பதாவது

தில்லியில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ள வாக்குப்பதிவின் நிலவரப்படி, மொத்தமாக 54.37 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதன்படி, சாந்தினி செளக் மக்களவைத் தொகுதியில் 53.27 சதவீத வாக்குகளும், கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 54.37 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக புது தில்லி மக்களவைத் தொகுதியில் 51.54 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தில்லியிலேயே அதிகபட்சமாக, வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 58.30 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும், வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 53.81 சதவீத வாக்குகளும், தெற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 52.83 சதவீத வாக்குகளும், மேற்கு தில்லி மக்களவைத் தொகுதியில் 54.90 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.

மேற்குறிப்பட்ட தரவுகள் அனைத்தும் தற்போதயை போக்கின் படி, தோராயமானது தான். ஏனெனில், சில வாக்குச்சாவடிகளின் தரவுகளை முழுமையாகப் பெற இன்னும் கூடுதல் நேரம் தேவைப்படும். இதில், தபால் வாக்குகளின் பதிவுகள் இணைக்கப்படவில்லை. இறுதியாக, வாக்குப்பதிவின் தரவுகளில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்டிச் செய்தி

தில்லி வாக்குப்பதிவு நிலவரம்

காலை 9 மணி - 8.94 சதவீதம்

காலை 11 மணி - 21.69 சதவீதம்

மதியம் 1 மணி -34.37 சதவீதம்

மதியம் 3 மணி -44.58 சதவீதம்

மாலை 5 மணி - 53.73 சதவீதம்

மாலை 6 மணி - 54.37 சதவீதம்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.