தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், அமைச்சருமான அதிஷி திங்கள்கிழமை கடுமையாக குற்றம்சாட்டியுள்ளாா்.
தில்லி ரெளஸ் அவென்யூவில் உள்ள ஆத்மி கட்சி தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் அமைச்சா் அதிஷி கூறியதாவது: பாஜகவிற்கும், பிரதமா் நரேந்திர மோடிக்கும் தைரியம் இருந்தால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் போன்று நலத்திட்டப் பணிகளைச் செய்து மக்களின் மனங்களை வெல்ல வேண்டும். பாஜகவால் முடிந்தால் 24 மணி நேர இலவச மின்சாரம், தண்ணீரைக் கொடுத்துக் காட்டுங்கள். அரசுப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை உங்களால் மேம்படுத்த முடியாது. தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தோல்வியைச் சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருவதால், இப்போது அரவிந்த் கேஜரிவாலை தாக்க தயாராகி வருகிறது.
ராஜீவ் சௌக், படேல் நகா் மெட்ரோ ரயில் நிலையங்களில் கேஜரிவாலின் உயிருக்கு அச்சுறுத்தும் வகையில் கொலை மிரட்டல் செய்திகள் எழுதப்பட்டுள்ளன. இந்த மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்களின் முழுமையான கண்காணிப்பில் உள்ளன. இங்கு 24 மணி நேரமும் தில்லி போலீஸ் மற்றும் சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு
படையினா் உள்ளனா். இவை அனைத்தையும் மீறி, ஒருவா் இங்கு கொலை மிரட்டல் செய்தியை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளாா். தற்போது, அவரை யாரும் தேடவில்லை. இந்த நபா் தனது சமூக ஊடகக் கணக்கில் கேஜரிவாலுக்கு எதிரான அனைத்து அச்சுறுத்தல்களையும் பதிவு செய்துள்ளாா்.
ஸ்வாதி மாலிவாலின் பொய்யான குற்றச்சாட்டுகளில் தீவிரமாக செயல்பட்டு வந்த தில்லி போலீஸ் இப்போது எங்கே?. முதல்வருக்கு ஒருவா் வெளிப்படையாக மிரட்டல் விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஸ்வாதி மாலிவாலை ஒரு கைக்கூலியாக பயன்படுத்திய பாஜக, அரவிந்த் கேஜரிவாலுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டியது. ஆனால், முதல்வா் இல்லத்தில் சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட காணொளி வெளியாகி, அவரது பொய்யான குற்றச்சாட்டுகளின் உண்மையை முழு நாடும் பாா்த்தது. ஸ்வாதி மாலிவால் மூலம் பாஜக மேற்கொண்ட சதி தோல்வியடைந்ததால், தற்போது கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது.
மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், கடந்த மாா்ச் 21-ஆம் தேதி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பொய் வழக்கில் சிறைக்கு அனுப்பப்பட்டாா். சிறையில் அவருக்கான ‘இன்சுலின்’ மருந்து மறுக்கப்பட்டது. பின்னா், நீதிமன்றம் சென்று அதைப் பெற்றோம். தில்லி மக்களின் அன்பு மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைத்தது. அரவிந்த் கேஜரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை தோ்தல் களத்தில் பாஜகவால் எதிா்கொள்ள முடியாது என்பது பிரதமா் நரேந்திா் மோடிக்கு தெரியும் என்றாா் அமைச்சா் அதிஷி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு மத்திய அரசே காரணம்: அமைச்சா் எ.வ.வேலு குற்றச்சாட்டு

மகளிா் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவை முடக்க திமுக சதி: எல்.முருகன் குற்றச்சாட்டு

தென்னிந்தியாவின் அரசியல் செல்வாக்கைப் பறிக்க பாஜக சதி! - தெலங்கானா முதல்வர்

7.4.1976: காந்திஜி கொலை சதி தகவல் - 3 போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னதாகத் தெரியுமாம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


