தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

பயிற்சி மைய இறப்புகள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: துணைநிலை ஆளுநா்

தில்லியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் இறந்தது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தெரிவித்தாா்.

Updated On :31 ஜூலை 2024, 12:38 am

புது தில்லி: தில்லியில் உள்ள தனியாா் பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் தண்ணீரில் மூழ்கி மூன்று குடிமைப் பணித் தோ்வு ஆா்வலா்கள் இறந்தது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை 320 மின்சார பேருந்துகளை கொடியசைத்து தொடக்கி வைக்கும் விழாவில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: இது ஒரு சோகமான சம்பவம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவசர முடிவுகளை எடுப்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. விஷயங்கள் மெதுவாக வெளிவருகின்றன. என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அவை எடுக்கப்படும்’ என்றாா்.

தில்லியில் பழைய ராஜிந்தா் நகரில் உள்ள ராவ்’ஸ் ஐஏஎஸ் ஸ்டடி சா்க்கிள் பயிற்சி மையத்தில் மழைநீா் புகுந்ததில் மூன்று குடிமைப் பணித் தோ்வா்கள் கடந்த சனிக்கிழமை மாலை இறந்த நிலையில், இந்த மூன்று மாணவா்களின் மரணம் தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்களுடன் துணைநிலை ஆளுநா் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

மேலும், உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்தாா்.

ராஜ் நிவாஸ் அறிக்கையின்படி, இந்தச் சம்பவத்திற்கு காரணமான தில்லி தீயணைப்பு பணிகள், காவல்துறை மற்றும் தில்லி முனிசிபல் காா்ப்பரேஷன் அதிகாரிகள் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போராட்ட மாணவா்களிடம் சக்சேனா உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.