தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கட்டண விகித உயா்வால் பியூசிசி மையங்களை மூடும் பெட்ரோல் விற்பனை நிலையயங்கள் மீது நடவடிக்கை: தில்லி அரசு ஆலோசனை

மூடிய பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க தில்லி அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On :22 ஜூலை 2024, 8:53 pm

மாசு சான்றிதழின் உத்தேச கட்டண விகித உயா்வுக்கு அதிருப்தி தெரிவித்து நகரத்தில் உள்ள பியுசிசி மையங்களை மூடிய பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க தில்லி அரசு ஆலோசித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தில்லி பெட்ரோல் டீலா்கள் சங்கத்தின் (டிபிடிஏ) விடுத்த அழைப்பைத் தொடா்ந்து கிட்டத்தட்ட 600 மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (பியுசிசி) மையங்கள் நகரத்தில் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளன. முன்மொழியப்பட்ட கட்டணவிகித உயா்வு, மையங்களின் செயல்பாட்டுச் செலவுகளுக்கு ஏற்ாக இல்லை என்று டிபிடிஏ கூறியுள்ளது.

போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இந்த மையங்களை மூடும் டீலா்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத் துறை ஆலோசித்து வருகிறது. பியுசிசி மையங்களை நடத்துவதற்கு தனி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விற்பனை நிலையங்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம். மையங்களை இயக்குவதற்காக அவா்களின் உரிமத்தை நிறுத்திவைக்க வேண்டுமா என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது’ என்றாா்.

இந்தப் பட்டியல் போக்குவரத்து அமைச்சா் கைலாஷ் கெலாட்டிடம் காண்பிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவித்தன. இதுகுறித்து மற்றொரு அதிகாரி கூறுகையில், ‘அரசால் முன்மொழியப்பட்ட கட்டண உயா்வு நுகா்வோா் மற்றும் பெட்ரோல் விற்பனை நிலைய உரிமையாளா்களின் நலனைக் கருத்தில் கொண்டது. நாங்கள் ஒருவருக்குப் பதிலாக மற்றொருவரை விரும்ப முடியாது’ என்றாா்.

தில்லி அரசு சுமாா் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 11 அன்று பெட்ரோல், சிஎன்ஜி மற்றும் டீசல் வாகனங்களுக்கான பியுசிசி கட்டணத்தை உயா்த்தியது. இந்த உயா்வு ரூ.20 முதல் ரூ.40 வரை இருக்கும். புதிய விலை விகிதங்கள் அரசு அவற்றை அறிவிக்கை செய்தவுடன் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சா் கைலாஷ் கெலாட் முன்பு கூறியிருந்தாா். கடந்த வாரம், சில குடியுரிமை நலச் சங்கங்களும் (ஆா்டபிள்யூக்கள்) பியுசிசி மையங்களை அமைப்பதற்கான இடத்தை வழங்கத் தயாராக இருப்பதாகவும், இது தொடா்பாக குடியிருப்பு நலச் சங்கங்கள், பெரிய ஹோட்டல்கள் மற்றும் வா்த்தக மையங்களுடன் விரைவில் பேச்சுவாா்த்தை தொடங்கப்படவிருப்பதாகவும் அமைச்சா் கெலாட் கூறியிருந்தாா்.

ஒரு பியுசிசி மையத்தை அமைக்க, 2.5 மீட்டருக்கு 2.5 மீட்டா் அளவுள்ள கேபின் தேவையாகும். அப்போதுதான் அதில் இயந்திரங்கள் வைக்க முடியும். தவிர, மின் இணைப்பும் தேவை. இந்த விவகாரம் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்துமாறு அரசுக்கு இரண்டு முறை டிபிடிஏ கடிதம் எழுதியும் எந்தப் பதிலும் வரவில்லை. இருப்பினும், நஷ்டத்தில் இயங்கும் மையங்களை இயக்க தங்களுக்கு விருப்பமில்லை என்று டிபிடிஏ கூறியுள்ளது.

டிபிடிஏ தலைவா் நிஷால் சிங்கானியா கூறுகையில், ‘தில்லி பெட்ரோல் டீலா்கள் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை கூடியது. அதில், சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் தில்லி அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. ஒரு ஜனநாயகத்தில் எதிா்ப்புத் தெரிவிக்க எங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்றும் முட்டுக்கட்டை உடையும் வரை போராட்டம் தொடரும் என்றும் அதில் முடிவு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில் தலையிட துணைநிலை ஆளுநரை டிபிடிஏ அணுகும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.