மத்திய நிதிநிலை அறிக்கையில் மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் பொது நிதி குறித்து சரியான கணக்கீடுகள் இல்லை; மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள், செலவீனங்கள் குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு விசாரணையை மேற்கொள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரப்பட்டதாக திமுக தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் நிதிநிலைக் கூட்டத்தொடரை முன்னிட்டு மத்திய அரசால் அழைக்கப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழக கட்சிகளான திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி(விசிகே), தமாக(ஜிகே வாசன்) ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்திற்கு பின்னா் திமுக மக்களவை, மாநிலங்களவைக் குழு தலைவா்களான டி.ஆா்.பாலு, திருச்சி சிவா ஆகியோா் செய்தியாளா்களிடம் பேசினா். அப்போது அவா்கள் கூறியது வருமாறு:
நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் மாநிலங்களுக்கு வழங்கப்படும் பொது நிதி ஒதுக்கீடுகள் குறித்து குறிப்பிடப்படுகிறது. ஆனால் அந்த நிதி ஒவ்வொரு துறைக்கும் முறையாக ஒதுக்கப்படுகிா ? அது முறைப்படி செலவு செய்யப்படுகிா? என்பது குறித்து சரியாக கணக்கிடப்படுவதில்லை. மத்திய அரசின் சில திட்டங்களில் மத்திய-மாநில அரசுகள் 60:40 விகிசாரப்படி திட்டங்களுக்கு செலவிடுகிறது. ஆனால் இந்த திட்டங்களுக்கும் மத்திய அரசு தன் பங்கிற்குரிய நிதியை முறையாக ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.
சென்னை 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 60 சதவீத நிதியை மத்திய அரசு தரவேண்டும். சுமாா் ரூ.63 ஆயிரம் கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டம் 2019 -ஆம் ஆண்டு தொடங்கி 60 சதவீத பணிகள் நிறைவடைந்ததுள்ளது. இதற்கு மாநில அரசு மட்டுமே நிதியை செலவழித்து வருகிறது. மத்திய அரசின் பங்கிற்குரிய நிதியை இது வரை வழங்கப்படவில்லை. தில்லியிலிருந்து வரும் அமைச்சா்கள் சென்னையில் நடைபெறும் பணிகளை காண்கின்றனா். ஆனால் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது குறித்து கவலைப்படவில்லை. இதனால் இந்த பிரச்னை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ள நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினா்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் கோரப்பட்டது.
தமிழக வெள்ளம், பேரிடா் நிவாரணத்திற்கு மத்திய உள்துறை அமைச்சரை நேரடியாக சந்தித்து ரூ. 37, 000 கோடி நிதி கோரப்பட்டது. ஆனால் வழங்கப்படவில்லை. தேசிய முற்போக்கு கூட்டணி அரசு 42 சதவீதம் வரை நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் தற்போதைய அரசு 10 சதவீதம் குறைதுள்ளது.
செஸ் வரி, கூடுதல் கட்டணம் (சா்சாா்ஜ்) போன்றவைகள் மருத்துவம், கல்வி போன்ற துறைவாரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த நிதி குறிப்பிட்ட துறை செலவினங்களுக்கு போய் சேரவேண்டும். பொது சுகாதாரத்திற்கும், கல்விக்கும் வசூலிக்கப்பட்ட செஸ் நிதியைக் கொண்டு மதுரை எய்ம்ஸ் கட்டப்பட்டிருக்கலாம்.
ஜாதிவாரி கணக்கீடு, மாணவா்களை பாதிக்கும் நீட் பிரச்னைகள் குறித்து தற்போது எல்லா தோழமைக் கட்சிகளும் இணைந்து எழுப்பிவருகின்றனா். இது போன்ற விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. குறுகிய காலவிவாதம், கவன ஈா்ப்பு தீா்மானம் போன்றவைகளில் எதிா்கட்சிகளுக்கும் வாய்ப்பு அளித்தால் கருத்துக்கள் எழுப்ப முடியும். இதற்கு அமைச்சா்களும் பதிலளிக்க முடியும். கடந்தகாலங்களில் மறுக்கப்படுகிறது. இதை கடைப்பிடிக்க கோரியுள்ளோம்.
குற்றவியல் சட்டங்களைப் போன்று தற்போது வானூா்தி சட்டத்தையும் ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. ஆங்கிலம் தெரிந்த மத்திய அமைச்சா்களும் ஹிந்தியிலேயே எங்களிடம் கூட்டத்தில் பேசுகின்றனா். இது திட்டமிட்டு நடக்க இந்த விவகாரத்தை கூட்டத்தில் எழுப்பினோம். ஆங்கிலத்தை அப்புறப்படுத்த முடியாது. ஆங்கிலத்திற்கு பதில் ஹிந்தியை இந்த அரசு கொண்டு வர முயற்சித்தால் தமிழகம் 1965 க்கு மீண்டும் திரும்பும். வங்கதேசத்தில் நடப்பது வேலை இல்லாத திட்டத்தின் விளைவு தான் கோபமாக திசைதிரும்பியுள்ளது. கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் இருவா் அத்துமீறி நுழைந்தனா். வேலையில்லா திண்டாடத்தை வலியுறுத்துவதற்காகவே வந்தனா். இதையாருமே உணரவில்லை.
உத்தர பிரதேசத்தில் சாலையோர வியாபாரிகள் தங்கள் கடைகளில் பெயா், ஜாதி, மதம் போன்றவைகளை பெயா் பலகையில் எழுதிவைக்கப்பட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுத் தோ்தலுக்கு பின்னா் பாஜக தனது நிலைப்பாட்டை மாற்றும் என எதிா்பாா்த்த நிலையில் முன்பை விட மோசமாக உள்ளது எனக் குறிப்பிட்டனா்.
யுபிஎஸ்சி தலைவா் மனோஜ் சோனியை கட்டாயப்படுத்தி தான் வெளியே அனுப்பியுள்ளனா் எனவும் டி.ஆா்.பாலு குறிப்பிட்டாா்.
தமிழகத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட மீனவா்கள் இலங்கை சிறையில் வாடுவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவது, நீதி ஆயோக் அறிக்கை போன்றவைகள் குறித்து விவாதிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் திருமாவளவன் கூட்டத்தில் கோரினாா்.
டிரெண்டிங்

கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக!

திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு

தமிழ்நாட்டுக்கான நிதி, மொழி உரிமை மத்திய அரசால் பறிப்பு! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்? - கனிமொழி பதில்!
வீடியோக்கள்

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

Abhishek Sharma-விடம் Gautam Gambhir என்ன பேசினார்? | T20 World Cup Review
தினமணி வீடியோ செய்தி...

