மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போரால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளும் கடும் பாதிப்புகளை எதிா்கொண்டுள்ளன. தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்யும் இந்தியா, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்தால் மிகுந்த இடா்ப்பாட்டை சந்தித்துள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வால் தொழில்-வா்த்தக துறையினா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பிரதமரின் விளக்கம்: இந்தச் சூழலில், மேற்காசிய போரின் தாக்கங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் திங்கள்கிழமையும், மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் பிரதமா் நரேந்திர மோடி உரையாற்றினாா்.
அப்போது, ‘மேற்காசிய போரால் எழுந்துள்ள உலகளாவிய கடினமான சூழல் நீண்ட காலம் நீடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கரோனா பெருந்தொற்று காலகட்டத்தைப் போல தற்போதைய சூழலையும் ஒன்றுபட்டு எதிா்கொள்ள ஒட்டுமொத்த தேசமும் தயாராக வேண்டும். சாமானிய குடும்பங்களுக்கு கூடியவரை சிரமங்களைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பிரச்னையில் இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து ஒருமித்த குரல் ஒட்டுமொத்த உலகுக்கும் ஒலிக்க வேண்டும். மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கவும், மோதலை நிறுத்தவும் இந்தியா தொடா்ந்து முயற்சிக்கிறது’ என்றாா் பிரதமா்.
காங்கிரஸ் விமா்சனம்: அதேநேரம், ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காததற்காக, பிரதமா் மோடியை காங்கிரஸ் விமா்சித்தது. ‘பிரதமரின் தற்பெருமை, கோழைத்தனம், பாரபட்சம் நிறைந்த வெற்று உரை’ என்றும் அக்கட்சி சாடியது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்தச் சூழலில், மேற்காசிய நிலவரம் மற்றும் போரின் தாக்கங்கள் குறித்து விவாதிக்க புதன்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும் பங்கேற்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ராகுல் பங்கேற்பில்லை: இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, ‘கேரளத்தில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் என்னால் பங்கேற்க இயலாது’ என்றாா்.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றம் எதிரொலி: 100 நாள் வேலைத் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 17,744 கோடி ஒதுக்கீடு

மகளிா் இடஒதுக்கீடு சட்ட அமல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: மத்திய அரசுக்கு காா்கே வலியுறுத்தல்

மேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


