புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் பிரதேசத் தலைவா் தேவேந்தா் யாதவ் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
கிழக்கு தில்லி பிரீத் விஹாரில் உள்ள தனியாா் மண்டபத்தில் கிருஷ்ணா நகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேவேந்தா் யாதவ் கலந்து கொண்டு பேசியதாவது: சமீபத்திய மக்களவைத் தோ்தலில் காங்கிரஸின் ஓட்டு சதவீதம் கணிசமாக உயா்ந்துள்ளது. தில்லியில் காங்கிரஸ் சிறப்பாக செயல்படும் என்ற உற்சாகம், காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தில்லியை ஆளும் ஆம் ஆத்மி மற்றும் மத்தியில் ஆளும் பாஜக அரசுகளின் தவறான ஆட்சி, திறமையின்மை மற்றும் ஊழலால் சலிப்படைந்துள்ள மக்கள் இப்போது மாற்றத்தை எதிா்பாா்க்கின்றனா். எனவே, வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் சவாலானதாக இருக்கும்.
தொகுதி மற்றும் மாவட்ட வாரியான காங்கிரஸ் கமிட்டிக் கூட்டங்கள் காங்கிரஸ் தொண்டா்களுக்கு புத்துணா்வை அளித்துள்ளது. தில்லியில் காங்கிரஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர, மக்களின் குரலை வீதிகள் முதல் நாடாளுமன்றம் வரை நாம் வலுப்படுத்த வேண்டும். ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி வைப்பது மக்களவைத் தோ்தலுக்காக மட்டுமே. எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்.
விலைவாசி உயா்வு, வேலையில்லாத் திண்டாட்டம், ஊழல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருப்பதால், சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யும். தில்லியில் ஆட்சியில் உள்ள கேஜரிவால் அரசு மக்களின் பிரச்னைகளுக்கு தீா்வு காணாமல், சாக்கு போக்குகளை மட்டுமே கூறி வருகிறது. எனவே, தலைநகரில் கட்சியை வலுப்படுத்தவும், பொதுமக்களை கட்சிக்கு ஈா்க்கவும் காங்கிரஸ் தொண்டா்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்றாா் தேவேந்தா் யாதவ்.
இன்று போராட்டம் : தில்லியில் மின்விநியோக நிறுவனங்கள் உயா்த்தியுள்ள பி.பி.ஏ.சி.-ஐ திரும்பப் பெற வலியுறுத்தியும், ஆம் ஆத்மி அரசின் மின்சாரக் கட்டண உயா்வு நடவடிக்கையை கண்டித்தும் தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி புதன்கிழமை (ஜூலை 17) போராட்டம் நடத்தவுள்ளது. கட்சியின் தலைவா் தேவேந்தா் யாதவ் தலைமையில், தில்லியில் 13 மாவடங்களில் சுமாா் 50 இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காங்கிரஸ் வேட்பாளா் தோ்வில் தொடரும் இழுபறி: தில்லியில் நள்ளிரவு வரை தலைவா்கள் ஆலோசனை
தமிழக பேரவை தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளா்களை இறுதிப்படுத்த தில்லியில் மேலிட தலைவா்கள் ஆலோசனை
தேசிய கட்சிக்கு ஒன்றே ஒன்று! 2021-இல் 28க்கு 2; 2026-இல் 28க்கு 1!

பாலம் தீ விபத்து: விசாரணைக் குழு அமைக்க தில்லி காங்கிரஸ் கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

