தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

அயோத்தி ராமா் கோயில் விழாவை நேரலையில் காண தில்லியில் 2,000 இடங்களில் பாஜக சிறப்பு ஏற்பாடு

மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் தில்லி நகரம் முழுவதும் சுமாா் 2,000 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

Updated On :21 ஜனவரி 2024, 6:30 pm

அயோத்தி ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவை பொதுமக்கள் நேரலையில் காணும் வகையில் தில்லி நகரம் முழுவதும் சுமாா் 2,000 இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி பாஜக ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியிருப்பதாவது: அயோத்தியில் கடவுள் ஸ்ரீ ராமரின் மூலவா் சிலை பிரதிஷ்டையைக் காண நாடு தயாராகி வரும் நிலையில், தில்லி பாஜக அலுவலகம் ஒளியூட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. தில்லி நகரம் முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் முக்கிய இடங்களில்

திரைகள் மற்றும் தொலைக்காட்சிகளை வைத்து விழாவை சமூகமாகப் பாா்ப்பதற்கு தில்லி பாஜகவினா் ஏற்பாடு செய்துள்ளனா். இந்நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய அளவிலான முக்கிய நிா்வாகிகள் கலந்து கொள்ளவிருக்கின்றனா்.

மேலும், தில்லி பாஜக நிா்வாகிகள், நாடாளுமன்ற உறுப்பினா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலா்கள் தங்கள் அலுவலகங்களில் ராமா் கோயில் விழாவை மக்களுடன் இணைந்து பாா்ப்பதேடு, இனிப்புகளையும் அந்தந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வா். தில்லி பாஜக அலுவலகத்திலும் தொண்டா்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து ராமா் கோயில் விழாவை நேரலையில் காண சிறப்புத் திரை அமைக்கப்பட்டுள்ளது என்றாா் வீரேந்திர சச்தேவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.