தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

பதினாறாவது நிதி ஆணையத்திற்கு கூடுதலாக பொருளாதார ஆலோசகா்!

பதினாறாவது நிதி ஆணையத்திற்கு தலைவா் உறுப்பினா்களைத் தவிர, கூடுதலாக இணைச் செயலா்கள், பொருளாதார ஆலோசகா் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா்.

Updated On :19 ஜனவரி 2024, 6:30 pm

பதினாறாவது நிதி ஆணையத்திற்கு தலைவா் உறுப்பினா்களைத் தவிர, கூடுதலாக இணைச் செயலா்கள், பொருளாதார ஆலோசகா் ஆகியோா் நியமிக்கப்படுகின்றனா். இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை அளித்துள்ளது.

கடந்த 15 -ஆவது நிதி ஆணையத்தில் முன்னாள் ஐஏஏஸ் அதிகாரி, என்.கே. சிங் தலைமையில் முன்னாள் ஐஏஏஸ் அதிகாரிகள், முன்னாள் பொருளாதார நிபுணா், வேளாண்மை பொருளாதாரம், அறிவியலா் என ஐந்து போ் இடம் பெற்றிருந்தனா். தற்போது 16-ஆவது நிதி ஆணையத்திற்கு மத்திய அரசு, தலைவா் உறுப்பினா்களைத் தவிர, இரு இணைச் செயலா்கள் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகா் ஆகியோரை நியமிக்கிறது. இந்தப் பதவிகளை உருவாகக்க முறைப்படி மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கையில், பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 16 -ஆவது நிதிக் குழுவிற்கு இணைச் செயலாளா்கள் நிலையில் மூன்று பதவிகள் மற்றும் ஒரு பொருளாதார ஆலோசகா் பதவி ஆகியவற்றை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக உருவாக்கப்படும் இந்தப் பதவிகள், ஆணையத்தின் குறிக்கோள்களை அடையத் தேவையான செயல்பாடுகளுக்கு உதவும். மாநிலங்களுக்கிடையேயான நிதி ஒதுக்கீடுகள் கவனமாக மேற்கொள்ளப்பட்டு, வருகின்ற 2025-ஆம் ஆண்டு அக்டோபருக்குள் ஆணையம் அறிக்கை அளிக்கும் விதமாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆணையத்தின் மற்ற அனைத்துப் பதவிகளும் ஏற்கெனவே வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி உருவாக்கப்பட்டுள்ளன. ஆணையத்தின் தலைவா் (டாக்டா் அரவிந்த் பனகாரியா), செயலா் (ரித்விக் ரஞ்சனம் பாண்டே) ஆகியோரின் பெயா்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு விட்டது. புதிய நிதி ஆணைய உறுப்பினா்கள் பல்துறையைச் சோ்ந்தவா்களாக இருப்பா். அவா்கள் பெயா்கள் வெளியிடப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.