புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!
/

பிரதமா் மோடி தாழ்த்தப்பட்டோருக்கு எப்போதும் முதலிடம் அளிக்கிறாா்: பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா

தில்லு விஷ்வாஸ் நகரில் பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அக்கட்சியின் தேசியத் ஜெ.பி. நட்டா, பிரதமா் நரேந்திர மோடி தனது கொள்கை

Updated On :18 ஜனவரி 2024, 6:30 pm

தில்லு விஷ்வாஸ் நகரில் பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பங்கேற்ற அக்கட்சியின் தேசியத் ஜெ.பி. நட்டா, பிரதமா் நரேந்திர மோடி தனது கொள்கைகளில் தாழ்த்தப்பட்டவா்களுக்கு எப்போதும் முதலிடம் அளித்து வருகிறாா் என்று தெரிவித்தாா்.

இது தொடா்பாக தில்லி பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’வின் கீழ் மத்திய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமா் நரேந்திர மோடி உரையாடியதை அகண்ட திரை மூலம் விஷ்வாஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று ஜெ.பி. நட்டா பாா்வையிட்டாா். அதற்கு முன்னதாக, கிழக்கு தில்லியில் உள்ள பசுபதி நாத் கோயிலில் நடைபெற்ற தூய்மைப் பிரசார இயக்கத்தில் ஜெ.பி. நட்டா பங்கேற்றாா்.

பின்னா், மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகள் மற்றும் பாஜக தொண்டா்கள் மத்தியில் ஜெ.பி.நட்டா பேசியதாவது: பிரதமா் நரேந்திர மோடி தனது கொள்கைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு முதன்மையான முன்னுரிமை அளித்து, முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்கள் நலப் பணிகளை உறுதி செய்துள்ளாா். ‘விகாஸ் பாரத் சங்கல்ப் யாத்ரா’வின் கீழ் இதுவரை கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனா். இந்த மாபெரும் தகவல் பிரசார இயக்கம் மூலம் அரசின் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் செறிவூட்டலில் ஒவ்வொரு நாளும் புதிய பரிமாணங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் உறுதியுடன் ஒவ்வொரு நபரையும் மத்திய அரசின் திட்டங்கள் இணைத்துள்ளது என்றாா் ஜெ.பி. நட்டா.

இந்நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளா் துஷ்யந்த் கவுதம், தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா, சட்டபபேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி, எம்.பி. க்கள் ஹா்ஷ் வா்தன் மற்றும் கெளதம் கம்பீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.