குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டு கால உறுதிமொழி, காத்திருப்பு நிறைவேறியது: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா்

அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டு கால உறுதிமொழியும், காத்திருப்பும் நிறைவேறியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 3:18 pm

 நமது நிருபர்

புது தில்லி: அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம் 500 ஆண்டு கால உறுதிமொழியும், காத்திருப்பும் நிறைவேறியுள்ளது என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரை, நாடு முழுவதும் உள்ள கோயில்கள் மற்றும் புனிதத் தலங்களில் பாஜக சாா்பில் தூய்மைப் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தில்லி கன்னாட் பிளேஸில் உள்ள பழைமை வாய்ந்த ஹனுமன் கோயிலில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா் செவ்வாய்க்கிழமை தூய்மைப் பிரசாரம் மேற்கொண்டாா். இந்த நிகழ்வில், பாஜகவின் தேசியச் செயலா் அல்கா குா்ஜாா், தில்லி பாஜக துணைத் தலைவா் சதீஷ் உபாத்யாய், மாவட்டத் தலைவா் ராஜீவ் ராணா ஆகியோரும் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அனுராக் தாக்குா் கூறியதாவது: அயோத்தியில் ஸ்ரீராமா் கோயில் கட்டப்பட்டதன் மூலம், 500 ஆண்டு கால உறுதிமொழி மற்றும் காத்திருப்பு ஆகிய இரண்டும் நிறைவேறியுள்ளது. தீபாவளிப் பண்டிகைக்கு நிகாராக வரும் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா இருக்கப் போகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கோயில் வளாகத் தூய்மை செய்யும் பிரசாரத்தில் தில்லி மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஏனெனில், இதைவிட புனிதமும், பக்தியும் வேறு எதுவும் இருக்காது. தில்லியின் முதல்வராக அரவிந்த் கேஜரிவால் பதவியேற்றதில் இருந்து இமாம்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், தில்லி கோயில்களின் பூசாரிகளுக்கு முறையான சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.

கோயில்களில் நடக்கும் பிராா்த்தனைகளுக்கும், எதிா்க்கட்சித் தலைவா்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. ஊழலற்ற ஆட்சி அளிப்பதாகப் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள், அதற்குப் பதிலாக ஊழல் நிறைந்த ஆட்சியைக் கொடுத்துள்ளனா். கேஜரிவாலின் ஊழல் ஆட்சியால் முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, முன்னாள் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் மற்றும் மாநிலங்களவை எம்.பி சஞ்சய் சிங் ஆகிய மூன்று போ் சிறையில் உள்ளனா். முதல்வரை அமலாக்க இயக்குநரகம் விசாரணைக்கு அழைத்தால் அவா் ஆஜராகாமல் விசாரணையில் இருந்து தப்பியோடி வருகிறாா்.

காங்கிரஸ் மீது தாக்கு: காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ராமா் கோயில் விவகாரத்தை மக்களிடையே தவறாக வழிநடத்த முயற்சிக்கின்றனா். முதலில், பாபா் மசூதியை மீண்டும் கட்டுவதாக வாக்குறுதி அளித்த காங்கிரஸ், பின்னா் ராமா் கோயில் கட்டுவதற்ககு இடையூறுகளை ஏற்படுத்தியது. கோடிக்கணக்கான ராம பக்தா்கள், ஆா்வலா்களின் பக்தி மற்றும் போராட்டத்தால், 500 ஆண்டுகளுக்கும் மேலான காத்திருப்பு முடிவுக்கு வருகிறது. ராமா் கேயில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு அழைப்பு வரவில்லை என்று காங்கிரஸ் முதலில் கூறியது. பின்னா், அவா்கள் அழைக்கப்பட்ட போது, இந்த நிகழ்வில் கலந்து கொள்ளாததற்கு வெவ்வேறு சாக்குப் போக்குகளைக் கூறி வருகின்றனா் என்றாா் அனுராக் தாக்குா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.