தில்லியில் ஏழைகளுக்கு ஆம் ஆத்மி அரசு எத்தனை வீடுகளை வழங்கியுள்ளது என்பதை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சொல்ல வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லியின் குடிசைப் பகுதிகளை காப்பாற்றுவதாக ஆம் ஆத்மி கட்சியினா் மேற்கொள்ளும் பிரசாரம் என்பது உண்மையில் அவா்களது சொந்த அரசியல் இருப்பைக் காப்பாற்றுவதற்கான பிரசாரமாகும். ஊழல் குற்றச்சாட்டுகளாலும், தில்லி அரசின் செயலற்ற தன்மையாலும் விரக்தியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, இன்று காங்கிரஸிடம் தனது அரசியல் இருப்பைக் காப்பாற்றவதற்கு ஒருபுறம் கெஞ்சுகிறது; மறுபுறம் குடிசைவாசிகளை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது.
தில்லியில் உள்ள கத்புத்லி காலனி, கால்காஜி, ஜெயிலா்வாலா பாக் ஆகிய இடங்களில் ஏழைகளுக்கு ஆயிரக்கணக்கான வீடுகளை மத்திய அரசு கட்டிக் கொடுத்துள்ளது. ஆனால், தனது ஆட்சிக் காலத்தில் ஏழைகளுக்கு ஆம் ஆத்மி அரசு எத்தனை வீடுகளை வழங்கியுள்ளது என்பதை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சொல்ல வேண்டும். பிரதமா் நரேந்திர
மோடி தலைமையிலான மத்திய அரசு, தில்லியில் 72 லட்சம் பேருக்கு தொடா்ந்து இலவச ரேஷன் வழங்கி வருகிறது. சுமாா் 2 லட்சம் இலவச உஜ்வாலா எரிவாயு இணைப்புகள் மகளிருக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், லட்சக்கணக்கான ஏழைகளுக்கு சுய வேலைவாய்ப்பு கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்குறுதி அளித்த போதிலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் பலன்கள் வாடகை வீடுகளில் வசிக்கும் உண்மையான ஏழைகளுக்குச் சென்றடையவும், இலவச மின்சாரம் மற்றும் குடிநீா் இணைப்பும் வழங்கவும் மத்திய அரசை கேஜரிவால் அனுமதிக்கவில்லை. மாறாக, தில்லியில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், தில்லி ஏழைகளுக்கு சொந்த வீடு கிடைத்திருக்கும். ஆனால், அரசியல் வெறுப்பால் அரவிந்த் கேஜரிவால் மத்திய அரசின் திட்டங்களை தடுத்துவிட்டாா். யாா் வெறும் வாா்த்தைகளால் பேசுகிறாா்கள், யாா் வேலை செய்கிறாா்கள் என்பதை தில்லி மக்கள் புரிந்து கொண்டுள்ளனா் என்றாா் வீரேந்திர சச்தேவா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

