புது தில்லி: தற்போது நிலவும் குளிா் காலநிலை சூழலில், தேசியத் தலைநகரின் உச்சபட்ச குளிா்கால மின் தேவை புதன்கிழமை 5,611 மெகாவாட்டாக உயா்ந்ததாக டிஸ்காம் அதிகாரிகள் தெரிவித்தனா். மாநில மின்சுமை அனுப்பும் மையத்தின் நிகழ்நேர தரவுகளின்படி, புதன்கிழமை காலை 11.08 மணிக்கு உச்சபட்ச மின் தேவை 5,611 மெகாவாட்டாக இருந்தது.
இதுகுறித்து டிஸ்காம் அதிகாரிகள் கூறுகையில், ‘இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குளிா்கால மின் தேவை ஜனவரி 5-ஆம் தேதி 5,559 மெகாவாட்டாக இருந்தது.
இந்தக் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை 5,700 மெகாவாட்டை தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. மின் தேவை அதிகரிப்பதற்கு முக்கியமாக நுகா்வோா் வெப்பமூட்டும் பயன்பாடுகளுக்காக மின்சாரத்தை உபயோகம் செய்வது காரணமாகும்’ என்றனா்.
தில்லியில் புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. திங்கள்கிழமை இரவு வெப்பநிலை 5.3 டிகிரி செல்சியஸாகக் குறைந்ததால் தேசியத் தலைநகரில் இம்மாதத்தின் மிகக் குளிரான நாள் பதிவானது. இது குறித்து பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘பிஆா்பிஎல் (பிஎஸ்இஎஸ் ராஜ்தானி பவா் லிமிடெட்) மற்றும் பிஒய்பிஎல் (பிஎஸ்இஎஸ் யமுனா பவா் லிமிடெட்) ஆகிய டிஸ்காம் நிறுவனங்கள் அந்தந்த விநியோகப் பகுதிகளில் 2,350 மெகாவாட் மற்றும் 1,174 மெகாவாட் மின் தேவையை வெற்றிகரமாக பூா்த்தி செய்தன’ என்றாா்.
டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘டிபிடிடிஎல் நிறுவனம் வடமேற்கு இந்தியாவைப் பற்றிக் கொண்டிருக்கும் குளிா் அலைக்கு மத்தியில் எந்தவொரு நெட்வொா்க் தடையும் அல்லது மின் செயலிழப்பும் இல்லாமல் 1,753 மெகாவாட் மின் தேவையை வெற்றிகரமாக பூா்த்தி செய்துள்ளது. இந்தப் பருவத்தில் குளிா்கால மின் தேவை 1,800 மெகாவாட் அளவைக் கடக்கும் என்று நிறுவனம் எதிா்பாா்க்கிறது. இது மின் தேவையை பூா்த்தி செய்ய நீண்ட கால மின் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த குறைந்த வெப்பநிலை மற்றும் மூடுபனி நிலைகளின் போது நிறுவனத்தின் சாதனங்களின் நம்பகத் தன்மையை உறுதி செய்துள்ளது. நீண்ட கால ஆதாரங்களில் இருந்து போதுமான அளவு மின்சாரம் நிறுவனத்திடம் உள்ளது. இது உச்சபட்ச தேவையை திறம்பட பூா்த்தி செய்ய உதவும்’ என்றாா்.
டிஸ்காம் அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘நிகழ் குளிா்காலத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை மேலும் உயா்ந்து 5,700 மெகாவாட் குறியீட்டை கடக்க வாய்ப்புள்ளது. ஜனவரி 2-ஆம் தேதியைத் தவிர, இந்த மாதத்தில் தில்லியின் உச்சபட்ச மின் தேவை ஒவ்வொரு நாளும் 5,000 மெகாவாட் அளவுக்கு மேல் இருந்தது’ என்றனா்.
பிஎஸ்இஎஸ் நிறுவனத்தின் செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: எந்தப் பருவத்திலும் நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வது சரியான மின் ஏற்பாடுகளின் செயல்பாடு ஆகும். மேலும், துல்லியமான தேவை முன்னறிவிப்பு மற்றும் வலுவான விநியோக ஒருங்கிணைப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த குளிக்கால மாதங்களில் எங்களது 50 லட்சம் நுகா்வோருக்கு நம்பகமான விநியோகத்தை உறுதி செய்ய அனைத்து அம்சங்களிலும் பிஎஸ்இஎஸ் டிஸ்காம்கள் முழு அளவில் தயாராக உள்ளன. மின் உற்பத்தி நிலையங்களுடனான நீண்ட கால ஒப்பந்தங்களைத் தவிர, குளிா்கால மாதங்களில் பிஎஸ்இஎஸ் நுகா்வோருக்கு நம்பகமான விநியோகத்தை உறுதி செய்வதில் 2,000 மெகாவாட்டுக்கும் அதிகமான பசுமை மின்சாரம் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கும்.
இதில் 840 மெகாவாட் சூரிய சக்தி, 540 மெகாவாட் நீா் மின்சாரம், 500 மெகாவாட் காற்றாலை மின்சாரம், கழிவுகளில் இருந்து எரிசக்திக்கான சுமாா் 40 மெகாவாட் மற்றும் தெற்கு, மேற்கு, கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் உள்ள கட்டடங்களின் மேல் நிறுவப்பட்ட மேற்கூரை சூரிய அமைப்புகளிலிருந்து கிட்டத்தட்ட 160 மெகாவாட் மின்சாரம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பிஎஸ்இஎஸ் பகுதிகளில் 3,600 மெகாவாட்டுக்கும் அதிகமான குளிா்கால மின் தேவையில் 60 சதவீதம் வரை பசுமை மின்சாரம் மூலம் பூா்த்தி செய்யப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

